சீதையை இருக்கும் இடத்தை எப்படியாவது கண்டுபிடித்து வந்துவிட வேண்டும் என்று மிகச் சரியாக இராமனால் தென்திசை
நோக்கி அனுப்பப்பட்டவர் தான் அனுமன் மகேந்திரமலையின் மீது நின்று கொண்டு அனுமன் மட்டுமல்ல அங்கு இருந்த வானரங்கள் ஜாம்பவான் முதலானவர்கள் எல்லாம் இராம நாமத்தை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
கழுகு அரசன் ஜடாயுவினுடைய சகோதரன் சம்பாதி இறக்கைகள் எரிந்த நிலையில் பல ஆண்டுகளாக அங்கே இருந்த ஒரு குகையில் வாழ்ந்து வந்தான்.இராம நாம் ஒலியை கேடு அந்த சம்பாதி மெல்ல மெல்ல இறக்கைகள் இல்லாத நிலையில் நகர்ந்து வந்து அந்த ராம நாமத்தை இன்னும் சற்று உரக்கச் சொல்லுங்கள் என்று கேட்கிறான்
முதலில் பயந்த வானரங்கள் இது யாராக இருக்கும் என்று சற்று சிந்தித்த நிலையில் பின்னர் ஜாம்பவானின் ஆலோசனை படி இராம நாமத்தை சொல்ல அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது .
சம்பாதி அங்கே குழுமி இருந்த வானர வீரர்களை நோக்கி நீங்கள் எல்லோரும் இராம நாமத்தை இன்னும் உரக்கமாக சொல்லுங்கள் அவ்வாறு சொன்னால் என் சிறகுகள் வளரும் அந்த இராமனின் அருளும் எனக்குக் கிட்டும் என்று சொல்லுகிறான்:
அதுகேட்ட வானர வீரர்களுக்கு ஒரு சந்தேகம். இராம நாமம் சொன்னால் இறக்கை வளருமா? எங்கே நாம் ஆராய்ச்சி செய்து பார்ப்போம். என்று எண்ணி இராமனின் திரு நாமத்தைச் சொல்லத் துவங்கின.. அப்போது சம்பாதியின் இறக்கைகள் மளமளவென்று வலிமையாக பெரிதாக வளர்ந்தன.
எல்லா வானரங்களுக்கும் ஒரே வியப்பு. சம்பாதி அங்கே வந்தபோது அவனது இறக்கைகள் கருகித் தேய்ந்திருந்தன. இப்போது அவை பளபளவென மின்னத் துவங்கின இச்சம்பவம் இரண்டு
செய்திகளை நமக்கு
தெரிவிக்கிறது.
முதல் செய்தி:-
பிற்காலத்தில் இந்த வானர சேனைதான் இராமனுக்காக இலங்கை வரை அணைகட்டித் தரப்போகின்றன. இப்போதே ராம நாமத்தின் மகிமையை அவைகளின் மனதில் வேரூன்ற வைக்கிறது
பிற்காலத்தில் அவை ஒவ்வொரு பாறை மீதும் இராம, இராம என்று எழுதியவுடன் அவை மிதக்கத்துவங்கி பாலம் எழுந்த்ததை நாம் அறிவோம்.
இரண்டாவது செய்தி மனிதர்களுக்கானது.
மானிடர்களே!
இராம நாம மகிமையை இப்பொழுதாவது நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் என்கிறது.
-ராஜகோபாலன்.J
சென்னை 18