Breaking News:
tamilnadu epaper

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்

முன்னெப்போதும் இல்லாத வகையில் நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் 5 முறை சாம்பியனான சென்னை அணி மிக மோசமான அளவில் திணறி வருகிறது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 1இல் மட்டும் வெற்றி பெற்று சென்னை அணி 9ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், வீட்டை கூட எழுதி தருகிறேன் என சென்னை ரசிகர் ஒருவர் சமூகவலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் கூறு கையில்,”சென்னை அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பே கொடுப்பதில்லை. சென்னை அணியில் ரஷீத் (ஆந்திரா) என்ற ஒரு வீரர் இருக்கிறார். அவர் அல்டிமேட் ஆக விளையாடுவார். நிஜமாகச் சொல்கிறேன், அவருக்கு இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கொடுங்கள். அந்தப் போட்டிகளில் ரஷீத் 30 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை என்றால், என்னுடைய வீட்டையே நான் சென்னை அணியின் பெயருக்கு எழுதித் தருகிறேன். நான் இதை ருதுராஜுக்கு ஆங்கிலத்தில் சொல்கிறேன்” என அவர் கூறியுள்ளார். (குறிப்பு : ரசிகர்கள் இடையே மோதல் ஏற்படும் என்பதால் பெயர் வெளியிடவில்லை)