" இந்த வயசான ஆளு வாசனுக்கு எப்பவும் வயசு பொண்ணு கேட்குது , இளம் பெண்களிடம் மட்டும் மணிக்கணக்கா பேசறார் என்ற கேளி கிண்டல் தினமும் அந்த ஊர்ல வாடிக்யான வேடிக்கை .
வாசன் இப்போது வயது எழுபது இந்த ஊருக்கு வந்த இருபது ஆண்டுகளாக இதைத் தான் செய்கிறார் வாசன் .
" வாசன் - மாலதிக்கு அன்பு மகள் ஆனந்தி நன்கு படித்து வேலைக்கு சென்றவள் கை நிறைய சம்பளம் , திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார் வாசன் .
" ஆனந்தி காதல் வலையில் விழுந்து விட அதை வீட்டில் சொல்ல தைரியம் இல்லாமல் கல்யாணம் நெருங்கும் நாளில் தற்கொலை செய்து கொண்டாள் ஆனந்தி .
ஒரே மகளை பறிகொடுத்த வாசன் மாலதி தம்பதியர் உடைந்து போய் வீட்டை விற்று விட்டு இன்று இந்த ஊருக்கு வந்து வீடு வாங்கி வசிக்கின்றனர் .
தன் மகள் ஆனந்திக்கு இறக்கும் போது வயது இருபத்தி மூன்று . அன்று முதல் இன்று வரை தன் மகள் ஒத்த வயது பெண்ணைக் கண்டால் நலம் விசாரிப்பதும் காதலில் சிக்கி இருக்கிறாளா என்று விபரம் கேட்பார் வாசன் . அறிவுரை சொல்லுவார் நல்ல வழிகளை அனுபவப் பாடமாக எடுப்பார் வாசன் .
இந்த உண்மை ஒரு நாள் அந்த ஊர் மக்களுக்கு தெரிந்து விட ஒரு உத்தமரை இகழ்ந்து கேலி செய்து விட்டோமே அவர் மனம் புண்பட செய்த விட்டோமே என்று புலம்பிய மக்கள் ஒன்று கூடி மன்னிப்பு கேட்க வாசன் வீட்டுக்கு படை எடுத்தனர் .
வாசன் மனைவி மாலதி வாசனை மடியில் போட்டு என்னையும் கூட அழைத்துக் கொண்டு போகக் கூடாதா என்ற கதறல் காதில் விழுந்தது .
ஊர் மக்கள் ஒப்பாரி சத்தம் காதை கிழித்து மன்னிப்பை கேட்க முடியாமல் கண்ணீரால் வாசனின் உடலை இன்று சுத்தப்படுத்தினர் ஊர் மக்கள் ..."
- சீர்காழி. ஆர். சீதாராமன் .
9842371679 .