tamilnadu epaper

உறவுகளின் பலம்

உறவுகளின் பலம்

 " விழுப்புரம் பகுதியில் நகைக்கடை வைத்திருந்தார் கிருஷ்ணன். அவர் கடையில் வியாபாரம் நன்றாக இருக்கும். தன் மனைவி உறவுகளை மட்டும் தள்ளியே தான் வைத்திருந்தார் கிருஷ்ணன்.

      விழுப்புரம் அருகில் உள்ள ஊரில் சின்ன நகைக்கடை வைத்திருந்தார் ரமேஷ் . அவர் அடிக்கடி  கிருஷ்ணன் கடைக்கு வந்து நகை வாங்கி செல்வார் . சில நேரம் பணம் கொடுப்பார் சில நேரம் கடனுக்கு வாங்கிச் செல்வார் . ஒரு வாரத்தில் பணம் கொடுத்து விடுவார் .

        இந்த நட்பு வருடக் கணக்கில் தொடர நம்பிக்கையும் இருவரிடமும் துளிர் விட்டது . ஒரு சமயம் ஒரு கோடிக்கு கிருஷ்ணன் கடையில் நகை வாங்கிச் சென்றார் ரமேஷ் . பணம் மாதமாகி வருடமாகியும் கொடுக்கவில்லை . பெரிய சரிவு கிருஷ்ணனுக்கு ஏற்பட்டாலும் தன் சொத்துக்களை வித்து சமாளித்து விட்டார் கிருஷ்ணன் .

      ஆனால் ரமேஷின் நம்பிக்கை   திரோகத்தை அவரால் மன்னிக்க முடியவில்லை . இதற்கிடையில் ரமேஷ் மகளுக்கு திருமணம் ஏற்பாடானது. நிச்சயதார்த்தம் முடிந்து திருமண நாள் நெருங்கியது.

      அன்று ரமேஷ் தன் சம்மந்தியை பார்க்க போனார். அப்போது சம்மந்தி வாங்க சம்மந்தி என் நெருங்கின உறவினர் குடும்ப உறுப்பினர் விஐபி ஒருவரை அறிமுக படுத்துகிறேன் என்று தன் வீட்டுக்குள் அழைத்துச் சென்றார் .

       " உள்ளே நுழைந்த ரமேஷ் ஷாக் அடித்தது போல் சிலையாய் நின்றார் காரணம் சம்மந்தி அறிமுகப்படுத்த இருந்த வி ஐ பி வேறும் இல்லை சாத்சாத் கிருஷ்ணன் தான் .

        கைகுலுக்கிய ரமேஷ் பேசி முடித்து விட்டு விடை  பெற்றார் . வரும் வழியில் சிந்திக்க தொடங்கினார் ரமேஷ்.

       என்ன தான் இருந்தாலும் தன் பெண் வாழ வேண்டிய குடும்பம் . அந்த குடும்பத்து உறுப்பினர் கிருஷ்ணன்  என்கிற எண்ணம் தலை தூக்கியது ரமேஷ்க்கு .

         வீடு திரும்பிய ரமேஷ் முதல் வேலையாக ஒரு கோடி ரூபாயை கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று திருப்பிக் கொண்டு கொடுத்தார்.
 நட்பு மீண்டும் மலர்ந்தது .

         மனைவியின் உறவுகளால் மீண்டது பணம் சொத்து என்று எண்ணிய கிருஷ்ணன் . தன் மனைவி சொந்தங்களை தாங்கிப் பிடிக்க அச்சாரம் போட்டார் ரமேஷ் பெண் திருமண மேடையில் , உறவுகள் தான் பலம் என்பதை உணர்ந்தவராய் நின்றார் கிருஷ்ணன் ......"

   - சீர்காழி. ஆர். சீதாராமன் .