சாந்தி ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவச்சியாக பணியாற்றி வருகிறாள்.
அவளுக்கு பணி நேரம் இரவு, பகல் என வாரவாரம் மாறி வரும்.
அவள் அலுத்துக்கொள்வாள் "நிம்மதியாய் வீட்டில தூங்க முடிவதில்லை எல்லோரும் தூங்கும் நேரம் டூட்டி பார்க்க வேண்டி இருக்கு, எல்லோரும் விழிக்கும் நேரம் தூங்க வேண்டி இருக்கு என்ன பொளப்பு இது" சலித்துக் கொள்வாள்.
அவளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் ஒருவள் ஆறாம் வகுப்பு இன்னொருவள் மூன்றாம் வகுப்பு.
அவர்களுக்கு சோறு செய்து, குளிப்பாட்டி பள்ளி அனுப்பும் வரை அனைத்து வேலைகளையும் சாந்தியின் மாமியார் தான் பார்த்து கொள்வார்கள்.
புருஷன் தேசாந்திரியாய் சுற்றி திரிகிறவன் எப்ப வீட்டுக்கு வருவான் எப்ப வெளிய போவான் என தெரியாது.
அவன் அம்மாவும், சாந்தியும் எவ்வளவோ புத்திமதிகள் அவனுக்கு சொன்னார்கள் "உனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறாங்க இப்படி ஊர் சுற்றிக்கொண்டு இருந்தால் நாளை எப்படி அவர்களை கரை சேர்க்க முடியும் கல்யாணம் ஆனா திருந்துவேன்னு பார்த்தேன் ஆனா நீ அப்படியே தான் இருக்க" அவனின் அம்மா மனதளவில் கஷ்டப்பட்டாள்.
சாந்தி "நீ எல்லாம் எப்பதான் திறந்த போறியோ பூமிக்கு கேடு" என புருஷனை எப்படி எல்லாம் திட்ட வேண்டுமோ அப்படி எல்லாம் திட்டி தீர்த்து பார்த்தாள்.
என்ன திட்டியும் அவளிடம் ஒரு மாற்றமும் இல்லை ஆகவே
இப்போதெல்லாம் அவனை யாரும் வீட்டில் திட்டுவதில்லை அவனை ஒரு நபராகவே அந்த வீட்டில் அவர்கள் யாரும் நினைப்பதும் இல்லை.
பிள்ளைகளுக்கும் அவன் மீது வெறுப்பு எல்லா அப்பாக்களும் தங்கள் குழந்தைகள் மீது எவ்வளவு பாசமாய் இருக்கிறார்கள்.
ஆனால் நம்முடைய அப்பா ஊர் சுற்றுவதிலே மும்முரமாய் இருக்கிறார் என கவலைப்பட்டார்கள்.
காலத்தின் கட்டாயம் இந்த நிலை மாறியது ஆம் சாந்திக்கு உடம்பு முடியாமல் போனது குளிர் ஜுரம் "ஒரு வாரம் வீட்டில் இருந்து உடம்ப நல்லா பார்த்துக்கோ நல்லான பிறகு வந்தால் போதும்" என அவளின் சீப் டாக்டர் சொல்லிவிட்டார்.
சாந்தியின் மாமியார் "எனக்கு சரியா கண் தெரியரதில்ல முன்ன மாதிரி ஓடியாடி வீட்டு வேலை செய்ய முடியறதில்ல இது மாதிரி சமயம் வீட்ல இருடா " என அவளின் அம்மா கண்ணீர் சிந்த பேசினாள்.
சாந்தியோ தன் படுக்கையில் இருந்த படியே கணவனை பார்த்து ஒரு வார சம்பளம்
தரமாட்டாங்க எனக்கு லீவ் கொடுத்ததே பெரிய விஷயம் மருந்து மாத்திர செலவு அதிகமாயிடுச்சு இந்த மாசத்த எப்படி சமாளிக்கப் போறேனோ" அழுதாள்.
"அதெல்லாம் நான் பாத்துக்குறேன் கவலைப்படாத என்னுடைய நண்பர்கள் எனக்கு உதவி செய்வார்கள்" என்றான்.
தன்னுடன் ஊர் சுற்றிய நண்பர்களிடம் விவரத்தை சொல்லி கடனாக பணத்தை கேட்டான்.
ஒருவரும் ஒரு ரூபாய் கூட கொடுக்க முன் வரவில்லை.
அந்நிலையில் உட்காந்து அவன் தேம்பித் தேம்பி அழுதான்.
நான் என் நண்பர்களுக்கு எவ்வளவு உதவி செய்து இருக்கிறேன் கணக்கு பார்க்காமல் எங்கெங்கெல்லாம் ஊர் சுற்றி அவர்களுக்கு தேவையானது எல்லாம் வாங்கி தந்திருக்கிறேன் இன்று ஒருவர் கூட உதவ முன்வரவில்லை
என்ன செய்யலாம் இந்த மாதம் எப்படி சமாளிப்பது வீட்டு வாடகை கொடுக்க வேண்டும்.
சீட்டு பணம் கட்ட வேண்டும் பிள்ளைகளுக்கு இந்த மாதம் ஸ்கூல் பீஸ் கட்டியாக வேண்டும் தீவிரமாய் யோசித்துக்கொண்டு இருந்தான்.
இதை எல்லாம் கேள்விபட்ட சாந்தியின் அண்ணன் தனது செல்போனிலிருந்து
"மாப்பிள்ளை கவலப்படாத உனக்கும் டெய்லரிங் தொழில் தெரியும் தானே பீஸ் ஒர்க் நிறைய வந்திருக்கு இரவும் பகலும் பார்க்காமல் நம்ம ரெண்டு பேரும் உக்காந்து தெச்சா எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகும்" என்றான்.
இப்பொழுதோஉண்ணாமல், உறங்காமல், ஊர் சுற்றாமல் தன் குடும்பத்திற்காக அவன் உழைத்துக் கொண்டு இருந்தான் .
அவன் பிள்ளைகளின் முகம் மலர்ந்ததது
சாந்தியின் மனம் குணமடைந்திருந்தது
அவனின் அம்மாவின் கண்கள் ஆனந்த துளிகளில் நிரம்பி இருந்தது.
-கவிமுகில் சுரேஷ்
தருமபுரி