tamilnadu epaper

எங்கள் ஊர் கன்னியாகுமரி சிறப்புகள்

எங்கள் ஊர் கன்னியாகுமரி சிறப்புகள்

கன்னியாகுமரி என்ற பெயர் எங்கள் ஊர் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்குக் கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாகக் கூறப்படுகிறது.

எங்கள் கன்னியாகுமரியில் வாழ்கின்ற மக்களின் முதன்மை மொழி தமிழ் ஆகும். மலையாளம் பேசுகின்ற சிறுபான்மையோரும் உள்ளனர். இந்த மாவட்டத்தில் பேசப்பட்டு வரும் வட்டாரத் தமிழ் சிறிது மலையாளம் கலந்து தனித்தன்மை கொண்டுள்ளது. 

 

சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை ஆய் அரசும், வேணாட்டு அரசும் ஆண்டதர்க்கான ஆதாரங்கள் தொல்காப்பியத்தில் உள்ளது. தற்போதைய குமரி மாவட்ட நிலப்பரப்பில் தலைநகரத்தை கொண்டு, களக்காடு முதல் கொல்லம் வரை உள்ள நிலப்பரப்பை 9- ம் நூற்றாண்டு முதல் 17-ம் நூற்றாண்டு வரை ஆட்சி நடத்தியவர்கள் வேணாட்டு அரசர்கள் 

 

தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும், முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது. 

 

இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. 

 

இம்மாவட்டம் பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் கொண்டுள்ளது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலை அசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும் ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன. 

 

மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல் சித்தருமான அகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் அகத்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால், அகஸ்தீஸ்வரமுடையாருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது. மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்மக்கலையிலும் அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணி, வர்மக்கலை ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறை|குரு-சிஷ்ய முறையில்]] கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது. 

 

தமிழ் நாட்டின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 95% கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. காற்றாலைகளுக்கு இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு உண்டு. ஆரல்வாய்மொழி பகுதியில் இவை அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.குமரி மாவட்டம் கைவினைப் பொருட்களுக்கு பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும் குரங்கு பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.கன்னியாகுமரி கடல் பகுதிகளில் இருநூறுக்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன. 

 

ஆழ்கடல் மீன்பிடித்தலில் இந்தியாவிலேயே சிறந்தவர்கள் கன்னியாகுமரி மீனவர்கள். 30 க்கும் மேற்பட்ட நாட்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து இந்தியாவின் அந்நியசெலவாணியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்! 

 

உயிரை பணயமாக வைத்தே இவர்களின் வாழ்வாதாரம் உள்ளது! 

 

சுனாமி , ஓகி புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் கன்னியாகுமரி மீனவர்களோடு போரிட்டு பலரது உயிரை சூறையாடியுள்ளன! 

 

கன்னியாகுமரியில் உள்ள உலக புகழ்பெற்ற முக்கிய சுற்றுலாத்தலங்கள் பின்வருமாறு 

 

• கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் 

 

• விவேகானந்த கேந்திரம் 

 

• விவேகானந்தர் பாறை 

 

• விவேகானந்தர் நினைவு மண்டபம் 

 

• திருவள்ளுவர் சிலை 

 

• காந்தி மண்டபம், கன்னியாகுமரி 

 

• காமராஜர் நினைவு மண்டபம், கன்னியாகுமரி