tamilnadu epaper

எங்கள் ஊர் சுந்தரபாண்டியபுரம் சிறப்புகள்

எங்கள் ஊர் சுந்தரபாண்டியபுரம் சிறப்புகள்

எங்கள் ஊர் சுந்தரபாண்டியபுரம் தென்காசி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு இரண்டாம் நிலை பேருராட்சி ஆகும்.

 

 

தென்காசி - சுரண்டை உள்வழி சாலையில் உள்ள சுந்தரபாண்டியபுரம், திருநெல்வேலியிலிருந்து 55 கிமீ தொலைவிலும்; தென்காசியிலிருந்து 10 கிமீ தொலைவிலும்;சுரண்டையிலிருந்து 3 கிமீ தொலைவிலும்; சாம்பவர் வடகரையிலிருந்து 4 கிமீ தொலைவிலும்; பாவூர்சத்திரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது. 

 

சுந்தரபாண்டிபுரம் 13.18 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும், அடங்கிய பகுதியாகும் 

 

சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் வழியாக தென்காசிக்கு மினிபஸ் உள்ளிட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.மேலும் பாவூர்சத்திரத்தில் இருந்தும் தென்காசிக்கு சுந்தரபாண்டியபுரம் வழியாக தென்காசிக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலியில் இருந்து சுரண்டை, சுந்தரபாண்டியபுரம் வழியாக திருமலைக்கோவிலுக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. 

 

இங்கு ஊரின் கீழ் பகுதியில் 19ம் நூற்றாமண்டுக்கு முற்பட்ட மீனாட்சிசுந்தரேஷ்வரர் கோவிலும் வடமேற்கில் மிக பழமை வாய்ந்த ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி (பெருமாள்) கோவிலும் வட கிழக்கு பகுதியில் குளத்தின் அருகில் ரம்மியமான சூழலில் திரிபுர சுந்தரி முப்பிடாதி(முப்பிடாரி=மூன்று பிடரி, மூன்று முகம்) அம்மாள் கோவிலும் அமைந்துள்ளது. மேலும் கிருத்துவ சர்ச் ஊரின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு சமுதாயமும் தங்களின் குலதெய்வங்களுக்கென தனிதனி கோவிலும் அமைத்து வழிப்பட்டு வருகின்றனர். 

 

இங்கு வாழும் மக்களின் பிராதன தொழிலாக விவசாயமே ஆதிமுதல் இன்று வரை உள்ளது. அதற்கு மூல காரணமாக இங்கு அமைந்த பெரிய குளமே உள்ளது. மேலும் இவ்வூரின் மக்கள் தத்தமது குல தொழில்களையும் (மட்பாண்டம் செய்தல்,தயிர் கடைதல்,மீன்பிடித்தல்,கூடைமுடைதல் போன்ற தொழில்களையும்) செய்து வருகின்றனர்.

 

 

அதிகளவில் பசுமை போர்த்திய வயல்வெளிகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள் நிறைந்துள்ளதால் தமிழக மற்றும் வெளிமாநில திரைப்படத்துறையினரின் மிகமிக விருப்பம்மான தளமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

இங்கு இரண்டு பிரதான குளங்களும் சிற்றாறு எனும் ஆற்றும் ஒரு நீர்ப்பாசன கால்வாயும் உண்டு

 

 

 

சுந்தரபாண்டிபுரம் அதிகளவில் பசுமை போர்த்திய வயல்வெளிகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள் நிறைந்துள்ளதால் தமிழக மற்றும் வெளிமாநில திரைப்படத்துறையினரின் மிகமிக விருப்பம்மான தளமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக சுந்தரபாண்டியபுரத்திற்கு ஒரு நாள் சுற்றுப்பயணத்தைத் திட்டமிடுகிறார்கள் மற்றும் சிறந்த காட்சிகளைப் பெற சூரியகாந்தி வயல்களை அதிகாலையில் பார்வையிடுகிறார்கள். ஜூலை மாத இறுதியில், பூக்கள் முழுமையாக பூக்கும், ஆகஸ்ட் நடுப்பகுதியில் வெட்டப்படும். சுந்தரபாண்டியபுரம் சூரியகாந்தி வயலுக்குப் பெயர்பெற்றது. 

 

. ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீ முப்பாடாத்தி அம்மன் கோவில் ஆகியவை நகரத்தின் மற்ற புகழ்பெற்ற கோவில்கள் ஆகும்.

 

பொன் சரவண குரு

செங்கோட்டை