tamilnadu epaper

எங்கள் ஊர் பாளையங்கோட்டை சிறப்பு

எங்கள் ஊர் பாளையங்கோட்டை சிறப்பு

சுமார் 175 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் சுலோச்சன முதலியார் ஆற்றுப்பாலம் திருநெல்வேலி- பாளையங்கோட்டை இரட்டை நகரங்களுக்கு மத்தியில் ஓடும் தாமிரபரணி ஆற்றைக் கடந்து செல்வது இணைக்கும் பாலமாக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அமைந்துள்ளது.

 

திருநெல்வேலியை சேர்ந்த சுலோச்சன முதலியார் என்பவர் தாமிரபரணி ஆற்றின் மீது ஒரு மேம்பாலத்தைக் கட்டி கொடுத்து மக்களுக்கு அர்பணித்ததால் அவர் பெயரே அந்த பாலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது..

 

மிகப்பெரிய கல்வி நிறுவனங்கள் இங்கு ஏராளமாக அமைந்துள்ளது. முதன்முதலில் பார்வையற்றவர் மற்றும் காது கேட்காத கேட்காதவர் பள்ளி பாளையங்கோட்டையில் தான் துவங்கப்பட்டது. அன்று முதல் தமிழகத்தின் ஆக்ஸ்போர்ட் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டு பாளையங்கோட்டை பல நாடுகளை முதல் கொண்டு திரும்பி பார்க்க வைத்தது.

 

செயின்ட் ஜான்ஸ் கல்லூரி, புனித சேவியர் கல்லூரி , செயின்ட் லூயிஸ் இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி, மற்றும் அரசு சித்த மருத்துவக் கல்லூரி போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களும். வா. உ. சி நினைவு விளையாட்டு மைதானமும் பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது.

 

 இங்கு அமைந்துள்ள அருள்மிகு திரிபுராந்திசுவரர் திருக்கோயில். புராண

காலத்தில் செண்பகாரண்யம் என்று வழங்கப்பெற்ற இக்கோவில் பாளையங்கோட்டை சிவன் கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

 

புனித டிரினிட்டி கதீட்ரல் சர்ச் இங்கு அமைந்துள்ளது . இது 1826ம் ஆண்டு ரெவரென்ஸ் ரேனியஸ் என்பவரால் கட்டப்பட்டது. 1845ம் ஆண்டு 158 அடி உயரத்தில் கோபுரம் கட்டப்பட்டது. இந்த கோபுரம் தான் தற்போது ஊசி கோபுரம் என்று அழைக்கபடுகிறது.

 

தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மத்திய சிறைச்சாலை பாளையங்கோட்டை சிறை ஆகும். தமிழகத்திலுள்ள பெரிய சிறைச்சாலைகளில் பாளையங்கோட்டை சிறையும் ஒன்றாக விளங்குகிறது. தமிழ்நாடு சிறை துறையின் கட்டுப்பாட்டில் தற்போது பாளையங்கோட்டை சிறை இருக்கின்றது.

 

இங்கு மிகப்பெரிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஹை கிரவுண்ட் அதாவது பாளை மேட்டுப்பகுதி என்றழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ளது. 

 

இங்குள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி, என்பது இந்திய மருத்துவத்தின் மத்தியமத்திய கழகம், புது தில்லியால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவக் கல்லூரியாகும். 1964ல் தொடங்கப்பட்ட இக்கல்லூரி மாற்று மருத்துவத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளை வழங்கி வருகிறது.

 

இங்குள்ள வ .வு .சி விளையாட்டு மைதானத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

 

பாளை மார்க்கெட் மற்றும் உழவர் சந்தையில் பசுமையான கீரை வகைகள், கிழங்கு வகைகள் மற்றும்அனைத்து காய்கறிகளும் இங்கே கிடைக்கும்.

 

பி.எம்.ஜெ..சுமையா 

 

சென்னை 600014