tamilnadu epaper

எங்கள் ஊர் புவனகிரியின் சிறப்புகள்

எங்கள் ஊர் புவனகிரியின் சிறப்புகள்

புவனகிரி ராகவேந்திரர் அவதரித்த தலமாகும். மேலும் விருத்தாச்சலம் பரங்கிபேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக செல்லும் வெள்ளாற்று படுகையில் அமைந்துள்ள புவனகிரி பசுமைமிகுந்த செழிப்பான நகரம் ஆகும். இங்கு முக்கிய வணிகமாக பட்டுவியாபாரம் நடைபெற்று வருகிறது.

மாவட்டத் தலமையிடமான கடலூரிலிருந்து 43 கிமீ தொலைவில் உள்ள புவனகிரி பேருராட்சிக்கு அருகில் உள்ள தொடருந்து நிலையம், 9 கிமீ தொலைவில் கிழக்கில் உள்ள சிதம்பரம் ஆகும். இதன் மேற்கில் விருத்தாச்சலம் 37 கிமீ; வடக்கில் வடலூர் 12 கிமீ தொலைவில் உள்ளது. 

 

14.9 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 91 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி புவனகிரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது 

 

புவனகிரி என்ற வார்த்தையின் பொருளை பார்ப்போம் புவனம் என்றால் உலகம். கிரி  என்றால் மலை  அசைக்கமுடியாத பொருள். இந்த இரண்டு சொற்களின் கலவையாக புவனகிரி உள்ளது. எனவே, புவனகிரி என்றால் உலக மலை என்றும் பொருள்படும். புவனகிரி உள்ளூர் மக்களால் “மேல் புவனகரி” (மேற்கத்திய பிரிவு) மற்றும் “கீழ் புவனகிரி” (கிழக்குப் பகுதி) என குறிப்பிடப்படுகிறது. நகரத்தின் மக்கள் தொகையில் 75%க்கும் அதிகமானவா்கள் விவசாயம் செய்கின்றனா். நெல் முக்கிய பயிரிடப்படும் பயிர் ஆகும், தொடர்ந்து உளுந்து மற்றும் பச்சபயிறு பயிரிடப்படுகிறது. . வெள்ளாறு நதி (காவேரி நதியின் துணை நதி) நீர்ப்பாசனத்திற்காக இப்பகுதிகளுக்கு நீர் வழங்குகிறது. கைத்தறி தயாரிப்புகளான (லுங்கி, கை கர்ச்சீப்புகள், சாரிஸ், வேட்டிகள் போன்றவை) இந்த நகரத்தில் தயார் செய்கின்றனா். இது புவனகிரி பட்டு என அழைக்கப்படும் பட்டு சேலைகள் மற்றும் பட்டுத்துணிகள் ஆகும். 

 

புலனடக்கம், பழுத்த பக்தி, வைராக்கியம், மெய்யறிவு, ஞானம் எனச் சொல்லப்படும் உயர் குணங்களோடு அவதரித்த மகான்கள் பிறந்த புண்ணிய பூமி நம் பாரத பூமி. `எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி வந்தனமு’ என்று பாடிய ஸ்ரீதியாகையரின் வாக்கு, எத்தனை காலம் ஆனாலும் இம்மண்ணில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.புவனகிரிஅவ்வகையில், புவனகிரி எல்லையில்லா பெருமை கொண்ட ஊர். புவனேந்திரன் என்கின்ற மன்னன் ஆண்டதாலேயே புவனகிரி என்ற பெயர் வந்ததாக ஒரு செய்தி உண்டு. இவ்வூரில், கோட்டை ஒன்று இருந்ததாக தகவல் உண்டு. கோட்டையுள்ள தெரு கோட்டை மேட்டு தெரு என்று வழங்கப்படுகிறது. இதனருகில் ராஜா ராணி குளம் உள்ளது. 

 

புவனகிரி என்ற பெயரில் தமிழகத்தில் வேறு எந்த ஊரும் கிடையாது. ஆந்திராவில், புவனகிரி என்கிற ஒரு ஊர் உண்டு. தில்லை, இத்திருத்தலத்திற்கு அருகில் உள்ள புண்ணிய பூமி. ஸ்ரீகோவிந்தராஜன் பெருமானின் 12 புண்ணிய தீர்த்தங்களில் ஒன்றான வெள்ளாற்றின் (ஸ்வேத நதி) கரையில் அமைந்த சுந்தரத் திருத்தலம். ஏகாங்கி சுவாமிகள், வெள்ளியம்பலம் சுவாமிகள் போன்ற பல மகான்களும், வள்ளலார் போன்ற அருளாளர்களும் நடமாடிய பூமி. இத்தனைக்கும் மேல், மூன்று சமயங்களில், துவைத மதத்தை நிலைநிறுத்திய தூண்களில் ஒருவரான மந்த்ராலய மகான் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் அவதரித்த ஊர்.கண்ணன் கீதையில் சொல்கிறார். 

 

“உலகில் எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை எடுக்கிறதோ அப்பொழுது எல்லாம் இந்த பூவுலகில் நான் தோன்றுவேன்”.  அது சத்திய வாக்கு. அட்டூழியம் அதிகரிக்கும் பொழுது தர்மம் தழைக்க ஆண்டவனின் அம்சமாக அருளாளர்கள் தோன்றுவது நடந்துகொண்டுதான் வருகிறது. அப்படி தோன்றியவர்தான் மகான் ஸ்ரீராகவேந்திரர்.