Breaking News:
tamilnadu epaper

எங்கள் குலதெய்வம் அன்னூர் அருள்மிகு  மன்னீஸ்வரர் திருக்கோவில்

எங்கள் குலதெய்வம் அன்னூர் அருள்மிகு   மன்னீஸ்வரர் திருக்கோவில்

 

கொங்கு மண்டலம் கோவை மாவட்டம் அன்னூரில் அமைந்துள்ள

மன்னீஸ்வரர் திருக்கோவில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது இந்த இடம் வள்ளி வனமாக இருந்தபோது வேடர்கள் கிழங்கு பறித்து உணவாக உண்டு வாழ்ந்து வந்தார்கள் அன்னி என்ற வேடன் உணவுக்காக பூமியில் கிழங்கு தோண்டிய போது கோடாரியில் மண்ணை வெட்டிய இடத்தில் பெரும் சத்தம் கேட்டது அருகில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு ஓடிவந்தனர் அங்கே சுயம்பு லிங்கவடிவில் சிவபெருமான் இருந்தார் மண்ணிலிருந்து கட்டி இழுக்க முயற்சித்தார்கள் ஆனால் வெளியே வரவில்லை அருகில் இருந்த சேர மன்னனிடம் செய்தியை தெரிவிக்க வள்ளி வனத்திற்கு மன்னர் வந்தார் லிங்கத்தை சங்கிலியால் கட்டி யானையில் இழுக்க முயற்சித்தும் வரவில்லை அப்போது 

இடியுடன் அசரீரி இவ்விடத்தில் இறைவன் கோயில் கொள்ள இருப்பதாக தெரிவித்து சுயம்புலிங்கமாக சிவபெருமான் காட்சியளித்தார் ஆலயம் கட்ட அசரீரி சொன்னது வேடன் கோடாலியால் வெட்டியதையும் மன்னர் சங்கிலியால் கட்டி இழுத்ததையும் இறைவன் மன்னித்து அருள் புரிந்தார் இதனால் இத்தலம்  

மன்னீஸ்வரர் திருப்பெயரில் அமையப் பெற்றது இவ்வூர் வேடன்

அன்னியன் பெயரில் அன்னியூர் என்று அழைக்கப்பட்டது தற்போதும் மருவி அன்னூர் என்று இப்போது அழைக்கப்படுகிறது இறைவன் கைலை மலையில் இருப்பது போல் சுயம்புவாக காட்சியளிக்கிறார் இதுபோல் தமிழகத்தில் வேறு எந்த கோவிலிலும் இல்லை தென்காளகஸ்தி மேற்றலை தஞ்சாவூர் என்று போற்றப்படுகிறது அருந்தவ செல்வி அம்மன் ஆலயம் 1937 இல் கட்டப்பட்டது அன்றிலிருந்து அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர் என்று அழைக்கப்பட்டது மேலும் விநாயகர், முருகர், சூரியன், சந்திரன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், ஞானபைரவர், சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் என்று தனித்தனி சன்னதிகள் உண்டு 63 நாயன்மார்களுக்கும் சிலை வைக்கப்பட்டு உள்ளது 2004 ஆம் ஆண்டு ஏழு நிலை ராஜகோபுரம் குடமுழுக்கு நடத்தப்பட்டது கார்த்திகை நாளில் முருகர் சிறிய தேரில் கோவில் பிரகாரத்தில் வலம் வருவார் சிவன் ராத்திரி, அன்னாபிஷேகம், குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும் 2000ம் ஆண்டு முதல் புதிய தேர் திருமுருகன் அருள் நெறி கழகம், பொதுமக்கள் சார்பாக அமைக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் மிகச் சிறப்பாக கொடியேற்றத்துடன் துவங்கி மன்னிஸ்வரர் அருந்தவ செல்வி அம்மன் தேரில் பவனி வர ஆயிரக்கணக்கான மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து சிறப்பாக தேர் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது வரும் 10 -1 -2025, தேதியில் 25 ஆம் ஆண்டு தேர் திருவிழா விமர்சையாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அனைவரும் வருக ..வருக.. இறையருள் பெறுக இக்கோயில் சிறப்பு இங்கு 21 தீபம் ஏற்றி 21 முறை கோவிலை சுற்றி வந்தால் முன் ஜென்ம பாவ தோஷங்கள் நீங்கும் கோவை இல் இருந்து அன்னூர் வர 30 கிலோமீட்டர் தூரம் ஆகும் அன்னூர் பேருந்து நிலையத்திற்கு அருகே கோவில் உள்ளது

 

 

பொன்விழி அன்னூர்அருள்மிகு அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரர்

- பொன்விழி அன்னூர்