மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் என்ற ஊருக்கு அருகே குருவித்துறை என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த கோவில் குரு பகவானுக்கு சிறப்பு வாய்ந்த கோவில்.
இங்கு சித்திர ரத வல்லப பெருமாள் சீதாதேவி பூமாதேவியுடன் காட்சியளிப்பார் ஒரே சன்னதியில் குரு பகவானுடன் சக்கரத்தாழ்வார்ம் சுயம்பு மூர்த்திகளாக வீற்றிருப்பது ஒரு விசேஷமான ஒன்றாகும்.
விண்ணுலகில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் அடிக்கடி சண்டை நடைபெறுவது வாடிக்கை. அதுபோன்ற காலத்தில் இரு பக்கங்களிலும் பலர் உயிரிழப்பார்கள் பல தேவர்கள் ஏற்பார்கள் அசுரர்களும் உயிர் இழப்பார்கள்.
அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார் இறந்தவர்கள் உயிருடன் எழுப்பும் மிருத சஞ்சீவினி என்ற மந்திரத்தை கற்று இருந்தால் அசுரர்கள் பக்கம் உயிர் இழந்த அசுரர்கள் எல்லாம் அந்த மந்திரத்தை சொல்லி உயிர் பிழைக்க வைத்து விடுவார் சுக்ராச்சாரியார்.
இதனால் தேவர்கள் வலுவிழந்து அசுரர்களின் பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனது
இதனால் கவலையடைந்து தேவர்கள் சுக்ராச்சாரியார் இடம் சென்று அந்த உயிர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொள்ளலாம் என்று ஒருவரை கல்வி கற்பதற்காக சுற்றுலாச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தார்கள்.
அந்த குருவிடம் எல்லா கல்வியையும் கற்றுக் கொள்வதுடன் முக்கியமாக மிருத சஞ்சீவினி என்ற அந்த மந்திரத்தை கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தார். ஆனால் யாரை அவரிடம் கல்வி கற்பிக்க அனுப்பி அனுப்புவது என்று யோசனை செய்த போது பிரகஸ்பதி என்று சொல்லப்படும் வியாழனின் மகன் கசின் தேர்வு செய்யப்பட்டு சுக்ராச்சாரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.
சுக்ராச்சாரியாரிடம் சென்றவன் அவரிடம் கல்வி கற்றபடியே அவரது மகள் தேவயானி இடம் காதல் செய்தான்.
கல்வி கற்க வந்த கசன் தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அசுரர்கள் அறிந்து கொண்டனர் இதனால் கசன் மிருத சஞ்சீவினி மந்திரத்தை கற்கவே இங்கு வந்திருப்பதை அவர்கள் புரிந்து கொண்டனர் இதனால் கசனை எரித்து சாம்பலாக்கி சுக்ரச்சாரியார்
பருகிய பானத்தில் கலந்து கொடுத்து விட்டனர்.
தன் காதலனை காணாத தேவயானி தந்தை சுக்ராச்சாரியாரிடம் கண்டு பிடித்து தரும்படி அழுது வேண்டினான். சுக்ராச்சாரியார் அவரை உயிர்ப்பித்தார் இதற்கிடையில் மகனை காணாத குரு பகவான் அவனை மீட்டு தர அருளும்படி இந்த குருவித் துறையில் உள்ள வல்லப ரதப் பெருமாளை
வேண்டி தவம் இருந்தார்.
குருபகவானுக்கு அருள் செய்யவே அந்த பெருமாள் இந்த தலத்தில் எழுந்தருளி இருந்தார். இதனால் இது குரு ஸ்தலமாக கருதப்பட்டது இங்கு வழிப்பட்டால் குருவால் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் நம்மை வந்தடையும் என்பது சாஸ்திரம்.
குரு தன் மகனுக்காக வைகைக் கரையில் தவம் இருந்ததால் இந்த இடத்திற்கு குருவின் துறை என்று அழைக்கப்பட்டு பிறகு அது மருவி குருவித்துறை என்று பெயர் வந்தது
இங்கு எழுந்தருளி இருக்கும் சித்திர ரத வல்லப பெருமாள் மிகவும் சக்தி வாய்ந்தவர் இங்கு உள்ள தாயார் பெயர் செண்பகவல்லி தாயார். இந்த தாயாரிடம் வளையல் வைத்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் பக்தர்கள் வளைவுகள் கொண்டுவந்து அம்மனுக்கு சமர்ப்பித்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள்..
மனதில் உள்ள இருளைப் போக்கும் இந்த குரு ஸ்தலத்தில் குருபகவானுடன் சக்கரத்தாழ்வாரும் எதிரே பெருமாளின் அருகே செண்பகவள்ளி தாயாரும் அமைந்திருப்பது மிகவும் விசேஷம் இது மிகவும் பழமையான கோவில்.
மனதில் உள்ள சங்கடங்கள் நீங்க நமக்கு குருவின் அருள் கிடைக்க குருவித்துறை குரு பகவானை வணங்கி அருள் பெறுவோம்.
V. முத்து ராமகிருஷ்ணன் திருச்சி