tamilnadu epaper

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் - திருமாமகள்

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் - திருமாமகள்

 

 "திடீர்னு பவர் ஷட் டவுன் ஆயிடுச்சு... யாரு என்னத்த போட்டு வச்சாங்களோ... ஷார்ட் சர்கிட் ஆகி... இந்த ஏ பிளாக் முழுக்க பவர் போயிடுச்சு.. எப்ப எலக்ட்ரீசியன் வருது எப்ப சரி பண்ணி எப்ப மோட்டார் போட முடியும்" புலம்பிக் கொண்டு இருந்தார் சிதம்பரம் அதே பிளாட்டில் வசிப்பவர்.

 

" ஏகாம்பரம் சாரை கூப்பிடுங்க அவருக்கு தெரியாத வேலை இல்லை.. " என்றார் எதிர் பிளாட் கதிர் வேல். 

 

 சும்மாவே தலைக்கனம் கொண்டு சுற்றி தெரியும் ஏகாம்பரத்துக்கு, இப்படி வேற உசுப்பேத்தி விட நாலு பேர் இருப்பார்கள் அந்த பிளாட்சில்.

 

" என்ன என் பேச்சு அடிபடுகிறது..ம்..."

என்ற படி வந்தார் ஏகாம்பரம்.

 

 சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார்கள். சொன்னது போல் ஐந்தே நிமிடத்தில் பிரச்சனையை சரி பண்ணி விட்டார் ஏகாம்பரம்.

 

 தனி ஒருவன் படத்தில் தம்பி பாலையா போல தலைய நிமிர்த்து கொண்டு நடந்தார்.

 

" வாயும் வாய் கையும் கை ஓய்.. உமக்கு" என்பது வேறு வேறு யாரும் இல்லை. அதே பிளாட்டில் பத்து வருடமாக குடியிருக்கும் சர்மா தான்.

 

 தண்ணீர் பிரச்சனையையும் சரி செய்ததால் நல்ல மரியாதை கிடைக்கத் தான் செய்தது ஏகாம்பரத்துக்கு.

 

" ரொம்ப தேங்க்ஸ் சார் என்றார்கள் கோரசாய்.

 

" இருக்கட்டும் இருக்கட்டும் இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?.. எல்லா விஷயங்களிலும் நான் பழம் தின்னு கொட்டை போட்டு இருக்கேன்.. அப்படித்தான் பாருங்க ஒரு தடவை" தற்பெருமையை ஆரம்பித்து விட்டார் ஏகாம்பரம்.

 

 அவர் அறுத்த அறுவைக்கு எல்லோரும் நெளிய ஆரம்பித்து விட்டார்கள். வேறு வழி.

------

 

 மறுநாள் ஏகாம்பரம் வெளியில் கிளம்பி கொண்டிருந்தார்.

 

" என்ன ஆச்சு சார் வெளியில் காலையிலேயே கிளம்பிட்டீங்க. "

 

" ஒய்ஃப் ஊருக்கு போய் இருக்காங்க...வெளியில போய் சாப்பிட்டு வரலாம்... னு.. "

 

" நல்லா இருக்கு... போங்க...எங்க வீட்டுக்கு வந்து டிபன் சாப்பிடுங்க... நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்.. " என்றார் சர்மா. சர்மாவின் மனைவியும் அவரை புன்னகைத்து உள்ளே அழைத்தாள். 

 

 டைனிங் டேபிளில் இட்லி சாம்பார், பூரி மணம் பரப்பிக் கொண்டிருந்தது.

 

" என்ன இது...சாம்பார்ல இத்தனை உப்பு போட்டுட்ட... கெஸ்ட் வந்திருக்கிற சமயம் பாத்து " மனைவியை கடிந்து கொண்டார் சர்மா.

 

" இதெல்லாம் ஒரு பிரச்சனையா.. மைக்ரோ ஓவன் இருக்கு இல்ல.. வீட்ல.. கொஞ்சம் உருளைக்கிழங்கு குடுங்க.. "

 

 உருளைக்கிழங்கை வாங்கி அலசி அதை நறுக்கி இரண்டே நிமிடத்தில் உருளைக்கிழங்கு வேக வைத்து அந்த சாம்பாரின் போட்டார். சாம்பாரில் உப்பு கம்மியாகிவிட்டது.

 

" எப்படி சார் எப்படி?? " என்றாள் சர்மாவின் மனைவி.

 

" அதெல்லாம் அனுபவம் தான் வாழ்க்கையில... இந்த மாதிரி சின்ன சின்ன டிப்ஸ் எல்லாம் தெரிஞ்சு வச்சுக்கணும் எவ்வளவு வருஷமா சமைக்கிறீங்க.. " என்று ஏகத்தாளமாக ஒரு கிண்டல் அடித்து விட்டு "டிபனுக்கு ரொம்ப தேங்க்ஸ் மா கிளம்புறேன்" என்றார்.

 

 இப்படித்தான் அந்த பிளாட்சை சுற்று சுற்றி இதெல்லாம் செய்து கொண்டிருப்பார் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம். இருப்பினும் யாரும் ரொம்பவும் அவரிடம் வாய் திறக்க முடியாது. 

 

 ஆறு மணிக்கே எழுந்து ஃப்ளாட்ஸை சுற்றி வரும் ஏகாம்பரம் அன்று வெளியில் வரவில்லை.

 

 தன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லுவதற்காக அடுத்த பிளாட்ஸ் குட்டி பயல் குமார் அவர் வீட்டுக்குள் நுழைந்தான்.

 

" அங்கிள் இன்னைக்கு என்னோட ஹாப்பி பர்த்டே சாக்லேட் எடுத்துக்குங்க" என்று சாக்லேட்ஐ நீட்டினான்.

 

" ஹாப்பி பர்த்டே... டா செல்லம் இ ங்க கொடுக்குறதுக்கு கூட எதுவும் இல்லை ஆன்ட்டிக்கு உடம்பு சரியில்ல ஜுரம் படுத்திருக்காங்க...பாரு..."

 என்றார் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு.

 

" எங்க ஆன்ட்டியை நான் பாக்கட்டுமா" என்றான் குமார் பெரிய ஒரு டாக்டர் போல.

 

" ஏண்டா நீ டாக்டராக போறன்னு ஆசைப்பட்டே... அதுக்காக இப்பவே டாக்டர் மாதிரி பண்ற"

 

" அதெல்லாம் இல்ல அங்கிள்.. நீங்க பேசாம இருங்க" என்று சொல்லிவிட்டு, ஆன்ட்டி குட்டி குமார் வந்திருக்கேன்...." என்று நெற்றியில் கை வைத்தவன் அதிர்ந்தான். 

 

" என்ன அங்கிள் நெருப்பா கொதிக்குது.. ஆன்டிக்கு... ஒரு நிமிஷம் எனக்கு ஒரு வெள்ளை துணி கொடுங்க" சொன்னகுமார் எதையும் எதிர்பார்க்காமல் அங்கு டேபிளில் வைத்திருந்த ஒரு வெள்ளை காடா துணியை எடுத்து சதுரவாக்கில் நீட்டி கிழித்து தண்ணீரில் நனைத்தான். நெற்றிப் பகுதி முழுவதும் போட்டு விட்டான்.

 

" அங்கிள் உள்ள பால் காச்சிகிட்டு இருக்கீங்களா வாசனை வருது... "

 

 எழுந்தவன் அடுப்பு பக்கம் சென்றான். அருகிலிருந்த பைப்பை திறந்து தண்ணீரை எடுத்து பொங்கிக் கொண்டிருந்த பாலின் மேல் தெளித்தான். அடுப்பை நிறுத்தினான்.

 

" என்னடா இது மாயாஜாலம் எல்லாம் பண்ற எப்படி உனக்கு இதெல்லாம் தெரியும்" என்றார் ஏகாம்பரம்.

 

" அங்கிள் சில விஷயம் எல்லாம் சிம்பிள்... வீட்டில் அம்மா என்ன செய்றாங்களோ அதெல்லாம் அப்பப்ப பாத்துக்கிட்டே இருக்கணும் வெளியில நடக்கிறது பெரிய பெரிய விஷயம் அதுக்கு ரொம்ப யோசிச்சு செய்யணும்... சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் அப்சர்வ் பண்ணினாலே போதும் அங்கிள் பால் பொங்கிச்சுனா தண்ணி தெளிக்கணும்னு தெரியாதா.. என்ன... முதல்ல அடுப்பை நிறுத்த கை வராது. பக்கத்துல தண்ணி வச்சுக்கணும்.... அதே போல் உடம்பு சரியில்லைன்னா என்ன கான்செப்ட் ஈரத்துணி நனைச்சு நெத்தில போட்டாக்க ஜுரம் இறங்கும். அதுக்கப்புறம் டாக்டர் கிட்ட போய் ஊசி போடணும் அவ்வளவுதான்... சிம்பிள்... நான் வரேன்... நான் வீட்டுக்கு போயிட்டு ஆன்ட்டிக்கு இட்லி கொண்டு வரேன்" என்று கிளம்பினான் குட்டி குமார்.

 

 ஏகாம்பரத்தின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே. 

 

&&&&&