உலகப் புகழ்பெற்ற புத்தகங்கள்.
*ரோமானிய எழுத்தாளர் தாந்தே 1314லிருந்து 1321 வரை எழுதிய நூல் தி டிவைன் காமெடி (தெய்வீக கீதம்) நரகத்தின் அழிவிலிருந்து சொர்க்கத்துக்குப் போவதை உருவமாக வர்ணிக்கும் காவியம் இது.
* சோஸர்(1342-1400) லண்டனைச் சேர்ந்த ஒரு ஆங்கில கவிஞர்.
இவர் (1387-1400)-ல் எழுதிய கேன்டபரி. டேல்ஸ் கேன்டர் பரியில் உள்ள புனித தாமஸ் பெக்கெட் திருத்தலத்திற்கே புனித பயணம் செய்யும்போது நிகழ்வுகளை கதைகளாக தொகுத்து உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த நாடகமாகும். இது ஆங்கில மொழியில் எழுதப்பட்ட முதல் செய்யுள் காவியமும் ஆகும்.
*இத்தாலிய வரலாற்றறிஞர்
மேக்கியவெல்லி(1469-1527) 1513-ல்
இளவரசன் ( தி பிரின்ஸ்) என்ற நூலை எழுதினார். அதிகாரத்தை கைப்பற்றுவது அதை தக்க வைத்துக் கொள்வது ஒரு அரசனின் கடமைகள் போன்றவை இதில் இடம் பெற்றுள்ளன.
*சர் தாமஸ் மூர் என்ற ஆங்கிலேய வழக்கறிஞர் 1515- ல் எழுதிய நூல் உட்டோப்பியா. சமூகத்தை விமர்சிப்பது அதற்கு பதிலாக ஒரு அமைப்பை ஏற்படுத்துவது என்ற இரண்டு காரியங்களையும் மூர் அழகாக சுட்டிக் காட்டுகிறார்.
*ஆண்ட்ரியஸ் வெசாலியஸ் (1514-1564) என்ற ஃபிளமிஷ் மருத்துவர் 1543-ல் எழுதிய நூல் ஃபாபரிக் ஆப் ஹுயூமன் பாடி. இதுவே மனித உடல் பற்றிய உலகிலேயே மிகவும் விரிவான நுணுக்கமான வர்ணனைகளோடு எழுதப்பட்ட நூல் ஆகும்
* செர்வான்டீஸ் (1547-1616) ஸ்பெயின் நாட்டு நாவலாசிரியர். இவர 1605 மற்றும் 1615-ல் எழுதிய "டான்குயிஸோட்" நவீன நாவலில் முதலாவதாக கருதப்படுகிறது.
*இத்தாலிய ஓவியர் லியானர்டோ
டா வின்சி(1452-1519) 1490-ல் எழுதிய TREATISE OF PAINTINGS ஓவியம் ஒரு கலை அல்ல விஞ்ஞானம் என்பதை வலியுறுத்துகிறது.
* COPERNICUS என்ற போலந்து விண்கோள் பற்றிய ஆராய்ச்சியாளர் எழுதிய ON THE REVOLUTION என்ற நூலில் பூமி தன் அச்சில் ஒரு நாளுக்கு ஒருமுறை சுழல்கிறது. கூறியதை கிரகங்கள் சுற்றுகின்றன போன்ற உண்மைகளை எழுதினார். இதை எழுதுவதற்காக இவரை சிறையில் அடைத்தனர். இதனால் புத்தகத்தை எழுதிய குறுகிய காலத்தில் இவர் மரணமடைந்தார்.
*ஆங்கில இயற்பியல் மற்றும் கணித மேதையான சர் ஐஸக் நியூட்டன்(1643-1727) எழுதிய மேத்தமேட்டிக்கல் பிரின்ஸஸிபில்ஸ் ஆப் நேச்சுரல்
பிலாசபி(1687) The Princpia என அழைக்கப்படுகிறது. இது நவீன இயற்பியலின் அஸ்திவாரமாகத் திகழ்கிறது.
*ஆங்கிலேய எழுத்தாளரான ஜான் பான்யன் (1628-1688) எழுதிய நூல்
பில்க்கிரீம்ஸ் ப்ராக்கரஸ் (1678-84).
ஒரு காலத்தில் இது விவிலியத்திற்கு அடுத்தபடியான வாசர்களிடம் செல்வாக்கைப் பெற்றிருந்தது.
க.ரவீந்திரன்,
22 பிள்ளையார் கோயில் வீதி, சாஸ்திரி நகர்,
ஈரோடு - 638002.