ராஜா சிதம்பரத்தில் ஒரு கான்வென்ட்டில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான் .


   " ராஜா ஏழை வீட்டு பையன் ஆனாலும் படிப்பில் பண்பில் சுட்டி" />

tamilnadu epaper

ஏழையின் புன்னகை

ஏழையின் புன்னகை


  " ராஜா சிதம்பரத்தில் ஒரு கான்வென்ட்டில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான் .


   " ராஜா ஏழை வீட்டு பையன் ஆனாலும் படிப்பில் பண்பில் சுட்டி . அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும் .


  ராஜாவிற்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான் ராஜா ஒரே மகன்.


  ராஜாவின் தந்தை விபத்தில் இறந்து விட குடும்ப பாரம் முழுவதும் தலையில் விழ தினக்கூலியாக தினமும் உழைத்து குடும்பத்தை காப்பாற்றி வந்தாள் ராஜாவின் அம்மா வாணி .


  தன் கற்பிற்கு பங்கம் வருவது புரிந்து விட அதை விட்டுவிட்டு ஒரு கான்வென்ட்டில் ஆயா வேலை கிடைத்தது சேர்ந்து வேலை செய்தாள் வாணி .


   ராஜா படிக்கும் கான்வென்ட்டில் படிப்பு, விளையாட்டு, போட்டிகள் அனைத்திலும் முதல் பரிசு பெற்ற ராஜாவிற்கு விருது கொடுக்க திட்டமிட்டது அவனது பள்ளிக்கூட நிர்வாகம்.


  பெற்றோருடன் வந்து மாணவன் பரிசு வாங்க வேண்டும் என்பது 

பள்ளியின் சுற்றரிக்கை .


    பள்ளிக்கு ராஜாவுடன் வந்த வாணி தலை குனிந்து வெட்கம் பயம் சபை நடுக்கம் என காட்டி சென்று அமைதியாக அமர்ந்து விட்டாள் .


  பரிசு கொடுக்க வந்த சிறப்பு விருந்தினர் ஏ... வாணி நீ இங்கே எப்படி என்று கேட்டார் .....?"


   முகம் சுருங்கினாலும் சுதாரித்துக் கொண்ட வாணி என் மகன் தான் ராஜா என்பதை அறிமுகப்படுத்தி வைத்தாள் தன் பள்ளி தாளாளர் ராஜன் அவர்களுக்கு மெதுவாக .


   பரிசு அளிக்கும் போது எங்கள் கான்வென்ட் ஆயாவின் மகன் தான் ராஜா என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், குடிசையில் பூத்த வெற்றி மலர் ராஜா என்றார் சிறப்பு விருந்தினர் .


    இதுவரை கும்பிடு மட்டும் போட்டு பழகிய வாணியின் தலை முதன் முதலில் நிமிர்ந்தது சபை நடுவில் மகனின் சாதனையால் .


     மகனின் சாதனை மேடையில் ஆயா வேலை தான் பார்க்கிறேன் என்பதை தலை நிமிர்ந்து உரக்க சொன்னாள் வாணி பெருமித்தோடு ."


   - சீர்காழி. ஆர். சீதாராமன்.

     9842371679 .