tamilnadu epaper

ஐ.சி.சி. விருதுகளை பெற்றுக் கொண்ட ஜஸ்பிரித் பும்ரா

ஐ.சி.சி. விருதுகளை பெற்றுக் கொண்ட ஜஸ்பிரித் பும்ரா

துபாய், பிப்.24-


இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொடங்குவதற்கு முன்பாக கடந்த ஆண்டுக்கான ஐ.சி.சி.விருதுகளை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுக் கொண்டார்.


ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு ஐ.சி.சி. சார்பில் அறிவிக்கப்பட்ட விருதுகளை பெற்றுக் கொண்டார்.கடந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதினை ஜஸ்பிரித் பும்ரா வென்றார். ஐ.சி.சி.யின் விருதுகளை பும்ரா பெற்றுக் கொள்ளும் புகைப்படத்தை ஐசிசி அதன் எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் பார்க்க துபாய் சென்றிருந்த அவருக்கு ஐ.சி.சி. சார்பில் அதன் தலைவர் ஜெய் ஷா அவ்விரு விருதுகளையும் வழங்கினார். மேலும் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியிலும், சிறந்த 20 ஓவர் போட்டி அணியிலும் இடம் பெற்றிருந்தார். அதற்குரிய சிறப்பு தொப்பியும் பும்ராவுக்கு வழங்கப்பட்டது.


பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியின்போது, ஜஸ்பிரித் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.