பெற்ற பிள்ளைகளிடம் நீ இப்படி ஆகணும் ?
அப்படி ஆகணும் ?
நீ இது தான் படிக்கணும்,அது தான் படிக்கணும்ன்னு ஆர்டர் போட்டு கண்ட்ரோல் பண்ணாதீங்க.
நீ அவன போல ஆகணும் ,இவன போல ஆகணும்ன்னு ஒப்பீடு பண்ணாதீங்க .
ஒவ்வொரு பிள்ளைகளிடமும் ஒரு தனி திறமை இருக்கும் உங்கள் பிள்ளைகளிடத்தில் எது பலம் என்று ஆராயுங்கள் .
பலத்தை மென்மேலும் பலப் படுத்துங்கள். பலவீனத்தை குத்தி காட்டி இழிவு படுத்தாதீர்கள்,எப்போதும் தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசுங்கள் உங்கள் குழந்தைகளின் சுயத்தை ஒருபோதும் இழக்க செய்து விடாதீர்கள் !
எல்லா நேரங்களிலும் பெற்றோராய் மட்டும் நடந்து கொள்ளாதீர்கள் .நண்பனாகவும் பழக கற்றுக் கொள்ளுங்கள் .
தினம் ,தினம் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேச கற்றுக் கொள்ளுங்கள் .
பிள்ளைகளை பெற்று கொள்வது மட்டும் வரமாகாது அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதும் பெற்றோரின் பொறுப்பு தான் .
தினம் தினம் உங்கள் குழந்தைகளிடத்திலும் மனம் விட்டு பேசி ,பேணி காத்து வளருங்கள்.
நிச்சயம் உங்கள் குழந்தை பேர் சொல்லும் பிள்ளையாக வளரும்!
-லி.நௌஷாத் கான்-