tamilnadu epaper

ஒரு பலாப்பழம் ..பல படிமங்கள்

ஒரு பலாப்பழம் ..பல படிமங்கள்

உறவினர் ஒரு பலாப்பழம் கொண்டு வந்து தந்தார்

-அன்பு

 

அதை நான் 8 துண்டுகளாக்கி 8 பேருக்கு பகிர்ந்தேன்

-பகிர்ந்துண்ணல்

 

ஒரு துண்டை அருகில் உள்ள வீட்டில் கொடுத்தேன். “பலாப்பழம் வாங்கினால் உறவு முறந்து விடும்” என்று வாங்க மறுத்தார்.

-மூடநம்பிக்கை

 

இன்னொரு வீட்டு சகோதரி. “அண்ணே உங்க வீட்டுல பலாப்பழ வாசனை வருது எனக்கு கொஞ்சம் கொடுத்து விடுங்கண்ணே...”

-உரிமை

 

எதிர் வீட்டில் ஒரு அரசு உயர் அதிகாரி. “இது எந்த ஊர் பழம்”, ஆலங்குடிங்க... “சாரி நான் பண்ருட்டி பழம் மட்டும்தான் சாப்பிடுவேன்”.

-திமிர்

 

கீழ் வீட்டுக்கு கொடுத்தேன் ‘கர்த்தருக்கு நன்றி' என்றார் 

-மதம்

 

வீட்டு பணி பெண்ணுக்கு கொடுத்தேன் “இந்த வருஷம் என் பேரப்புள்ளைங்க சாப்பிடப்போற முதல் பலாச்சுளை இதுதான்” என்றாள்.

-ஏழ்மை

 

நண்பர் ஒருவருக்கு கொடுத்தேன். “மச்சான் அடுத்த வருஷம் எனக்கு முழு பழமா கொடுக்கணும்” என்றான்.

-நட்பு

 

துணைவியாருக்கு ஒரு துண்டு 

-கடமை

 

என்னால் ஒரு சுளைக்கூட சாப்பிடமுடியவில்ல- நோய்

 

ஒரே ஒரு பலாப்பழம் வாழ்க்கையின் பல படிமங்களை சொல்லித் தருகிறது.

 

-ஆர். சுந்தரராஜன்,

சிதம்பரம்-608001