tamilnadu epaper

ஒரே கல் இரண்டு மாங்காய்

ஒரே கல் இரண்டு மாங்காய்

 

 

    கண்ணன் அப்பா எவ்வளவு படிச்சாலும் இந்த காலத்துல அரசாங்க வேலை கிடைக்கிறது குதிரை கொம்பு என அடிக்கடி சொல்ல

    "அப்ப என்னதான்பா பண்றது"

     "எனக்கு இருக்கிறது நீ ஒரே மகன் பணத்துக்கு என்ன குறைவு ஐம்பது ஏக்கரா நிலத்த பார்த்திகிட்டா போதாதா இன்னொருத்தர் கிட்ட போய் ஏன் கைய கட்டிகிட்டு வேலை பார்க்கணும்" என்பார்.

    கண்ணனுக்கு விவசாயத்தில் ஆர்வம் உண்டு அப்பா சொல்வது சரி என முடிவெடுத்தாலும்

    தாய்மாமன் மகள் "மாமா நீ ஒரு டிகிரி முடிச்சாதான் நான் உன்னைய கல்யாணம் செய்துக்குவேன் கல்யாண பத்திரிக்கையில நான் மட்டுமே என் பேர் பக்கம் டிகிரி போட்டா மாப்பள என்ன படிச்சாங்கன்னு கேட்டா நான் என்ன சொல்வேன்" என்றாள்.

    அவளுக்காக படிக்க வேண்டும் அப்பாவையும் திருப்த்திபடுத்த வேண்டும் என முடிவெடுத்தான்

     "அப்பா இந்த காலத்துல ஒரு டிகிரியாவது வாங்கனாதா எல்லாரும் மதிப்பங்க" என்றான்.

    அவனின் அப்பா கோபத்தோடு "நீ பாட்டுக்கு கம்ப்யூட்டர் படிச்சிட்டு வெளிநாடு போயிட்டா நான் என்ன பண்ணுவேன்" என்றார்.

     "இல்லப்பா விவசாயம் சார்ந்த படிப்பு பி.எஸ்ஸி அக்ரிகல்சர் படிக்கப் போறேன் உங்க கூடதான் இருக்கப் போறேன்" என்றான்.

     "விவசாய படிப்பா அப்படீன்னா படிப்பா நல்லது" என்றார்.

      தன் அத்தை மகளிடம் "இப்ப சந்தோஷமா" என்றான்.

     இப்பொழுது அந்த கண்ணன் வேளாண்மை துறை அமைச்சராக இருக்கிறார்.

     நினைத்தபடி திருமணம் ஆகி வாழ்ந்து வருகிறார்.

 

கவிமுகில் சுரேஷ்

 தருமபுரி