tamilnadu epaper

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே சிறந்தது: காவல்துறை அதிகாரி பேச்சு

ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே சிறந்தது: காவல்துறை அதிகாரி பேச்சு


வந்தவாசி , ஏப் 02:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி(ஆதிதிராவிடர் குடியிருப்பு) மாணவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் 'உடல் நலமும் மன நலமும்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ராஜீவி தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் நெடுமாறன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற வட்டார கல்வி அலுவலர் புலவர் ந. பானு பங்கேற்று, கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க வேண்டும் என்பதை பற்றியும், ஏரி குளம், குட்டைகளில் மாணவர்கள் தனியாக சென்று குளிக்க கூடாது. பெற்றோர் துணையுடன் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.மேலும் உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த திறன்கள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கினார். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியை அஸ்மாபீ வாழ்த்துரை வழங்கினார். இறுதியில் பட்டதாரி ஆசிரியர் ராஜசேகர் நன்றி கூறினார்.