tamilnadu epaper

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் இதுவரை பயனாளிகளுக்கு ரூ.47.44 கோடி ஒதுக்கீடு: ஆட்சியர் தகவல்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் இதுவரை  பயனாளிகளுக்கு ரூ.47.44 கோடி ஒதுக்கீடு: ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், பல்வேறு பகுதிகளில் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதை, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் செய்தியாளர் பயணத்தின் போது பார்வை யிட்டு ஆய்வு செய்தார். 

பூதலூர் ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் சீர மைக்கப்பட்டுள்ள வீட்டினை, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரி வித்ததாவது: “கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், குடிசை வீடுகள் அனைத்தையும் கான்கீரிட் வீடாக மாற்றிட 2024-25 ஆம் ஆண்டிற்கு தஞ்சா வூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 3,000 வீடுகள் (வீடு ஒன்று ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம்) மதிப்பீட்டில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது வரை 1,275 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை பயனாளி களுக்கு ரூ.47 கோடியே 44 லட்சத்து 80 ஆயிரத்து 56 மட்டும் கட்டுமானத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. இதுவரை பயனாளிகளுக்கு ரூ.27 கோடியே 88 லட்சத்து 99 ஆயிரத்து 36 மட்டும் பழுது நீக்கப் பணிகளுக்காக செல விடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். இந்த செய்தியாளர் சுற்றுப் பயணத்தின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர் மு. பாலகணேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ. மதியழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.