புதுடெல்லி, ஏப். 4–
மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கூறியதாவது:
தமிழ்நாட்டின் மிக முக்கிய வணிக நகரமான தூத்துக்குடியில் இருந்து தலைநகரம் சென்னைக்கு அன்றாடம் முத்து நகர் விரைவு ரயில் மட்டுமே ஓடுகிறது. அதில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், மேலும் அதிகரிக்கும் வணிக தொடர்புகளை கருத்தில்கொண்டும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக பழைய ஜனதா விரைவு வண்டி வழித்தடத்தில் புதிய விரைவு வண்டி ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.
அதேபோல் தூத்துக்குடியிலிருந்து குருவாயூர் மற்றும் நாகர்கோவில் விரைவு ரயில்களை இணைக்கும் இணைப்பு பயணிகள் ரயில்களை அரசாங்கம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதா? ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளபடி சென்னை – தூத்துக்குடி இடையில் வந்தே பாரத் விரைவு ரயிலை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டுமிட்டுள்ளதா ?
இவ்வாறு அவர் கூறினார்.