வேலூர்,ஏப்.5-
மத்திய அரசு வழக்கறிஞர் பொறுப்பேற்ற குடியாத்தம் கே. பி. கோபி புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்தை சென்னையில் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின்போது மத்திய அரசு வழக்கறிஞர் குடியாத்தம் கே. பி. கோபியுடன் குடியாத்தம் புதிய நீதி கட்சியின் நகர செயலாளர் எஸ். ரமேஷ் மற்றும் டி.பிரவீன் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். மத்திய அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ள கே. பி. கோபியின் பணி சிறக்க புதிய நீதி கட்சி தலைவர் ஏ. சி .சண்முகம் தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து மகிழ்ந்தார்.