வந்தவாசி, ஏப் 04:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீரங்கநாயகி தாயார் சமேத ஶ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவானது கருட கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இந்த வைபவத்தில் மூலமூர்த்தி களுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. மேலும் உற்சவ மூர்த்திகளுக்கு மலர் மாலைகள் சாற்றப்பட்டு, மேளதாளத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. பிறகு வேத மந்திரங்கள் முழங்க கருடக் கொடியானது ஏற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.