tamilnadu epaper

தீக்குண்டம் அருகே குழந்தையுடன் விழுந்த பக்தர்

தீக்குண்டம் அருகே குழந்தையுடன் விழுந்த பக்தர்


நாமக்கல், ஏப். 4–

பள்ளிபாளையத்தில் தீ மிதி திருவிழாவில் ஆறுமாத குழந்தையுடன் பக்தர் ஒருவர் குண்டத்தின் அருகே தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு அக்னி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது. இதற்காக கோவில் வளாகத்தில் குண்டம் வளர்க்கப்பட்டது. சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் உள்பட ஏராளமான பக்தர்க தீயை மிதித்தனர்.

தவறி விழுந்தார் இந்நிலையில் ஆவரங்காடு பகுதி குமார் என்ற பக்தர் தனது ஆறுமாத பெண் குழந்தையுடன் தீ மிதிக்க வந்தார். குழந்தையுடன் அக்னி குண்டத்தில் நடந்து சென்ற போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி அக்னி குண்டத்தின் மிக அருகிலேயே தன் குழந்தையுடன் கால் தடுமாறி கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பயத்தில் கூச்சலிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த கோயில் ஊழியர்கள் உடனடியாக குழந்தையையும், பக்தர் குமாரையும் பத்திரமாக மீட்டனர். அக்னி குண்டத்தின் வெளியே விழுந்ததால் அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை.