tamilnadu epaper

கண்ணீர்

கண்ணீர்

தீபாவளி நெரிசலில் 
சாலை ஓரம்
தள்ளாத வயதில்
தடுமாறித் தடுமாறி
கைக்குட்டை 
விற்றுக் கொண்டிருந்த 
முதியவரிடம்
பேரம் பேசிய 
பலரையும் பார்த்து
கைக்குட்டை விட்ட 
கண்ணீரைத் 
துடைத்து விடத் தான் 
யாருமே இல்லை 
இத்தரணியில்..!!

-ம.பாஸ்கர்,
தஞ்சாவூர்.