அந்த அலுவலகத்தின் ஸ்டாஃப் டாய்லெட்டைக் கழுவும் குப்பன் இரண்டு தினங்களாக வராமல், மூன்றாம் தினம் வந்து நிற்க, அவனை திட்டி தீர்த்தார் மேனேஜர் நரசிம்மன்.
யாரும் எதிர்பாராத வேளையில் குப்பனை அந்த ஸ்டாஃப் டாய்லெட்டிற்குள் தள்ளிக் கதவை சாத்தினார்.
அலுவலக ஊழியர்கள் அனைவரும் மிரண்டு பார்க்க, "அவன் எவ்வளவு கத்தினாலும்... நான் சொல்ற வரைக்கும் யாரும் இந்தக் கதவைத் திறந்து விடக் கூடாது!... ரெண்டு நாளா கிளீன் பண்ணாம எத்தனை நாற்றத்தோட நாம அதை யூஸ் பண்ணினோம்.... அந்தக் கஷ்டத்தை இந்தக் குப்பனும் தெரிஞ்சுக்கட்டும்!" கட்டளையிட்டு விட்டு நகர்ந்தார்.
அவர் இருக்கையில் சென்றமர்ந்த மறு நிமிடமே ஹெட் ஆபீஸிலிருந்து அழைப்பு வர, அதே வேகத்தில் கிளம்பிச் சென்றார்.
மூன்று மணி நேரத்திற்கு பிறகு திரும்பிய மேனேஜர் நரசிம்மனிடம் பியூன் முருகன் தயங்கித் தயங்கி டாய்லெட்டிற்குள் குப்பன் இருக்கும் விஷயத்தைச் சொல்ல,
"அட இன்னுமா அவனை உள்ளார வச்சிருக்கீங்க?... நான் சும்மா மிரட்டுவதற்காக உள்ளே தள்ளிக் கதவைட் சாத்தினேன்!... நான் போன பிறகு நீங்க திறந்து விட வேண்டியதுதானே?... அதையும் நான்தான் வந்து செய்யணுமா?" கோபமாய் கத்தினார்.
டாய்லெட் கதவு திறக்கப்பட்டதும் வியர்த்துப் போய் தள்ளாட்டமாய் வெளியே வந்த குப்பன் தட்டுத் தடுமாறி அங்கிருந்து அகன்றான்.
ஆனால், மறுநாளே அவன் மூச்சுத் திணறலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அலுவலகத்திற்கு வந்தது.
அடுத்த வாரத்தில் ஒரு நாள்,
டாய்லெட்டில் நுழைந்து கதவை தாழிட்டு விட்டு, வந்த வேலை முடிந்ததும் கதவைத் திறக்கப் போன மேனேஜர் நரசிம்மன் அதிர்ந்தார்.
கதவு லாக் ஆகித் திறக்க இயலவில்லை.
பலம் கொண்ட மட்டும் முயற்சித்தார் பலன் இல்லை.
மொபைலயும் இருக்கையிலேயே வைத்து விட்டு வந்ததால் என்ன செய்வதென்றே புரியாமல், கதவை ஓங்கி ஓங்கித் தட்டினார்
அடித்தொண்டையில் கத்தினார்.
அந்த டாய்லெட் ஆஃபீஸின் இடது மூலையில் சற்று தள்ளி இருந்ததால் யாருக்கும் அவரது கத்தலோ தட்டலோ கேட்கவில்லை.
களைத்துப் போன மேனேஜரின் நெஞ்சுப் பகுதியில் "சுரீர்"ரென்று ஒரு வலி மெல்ல ஆரம்பிக்க, விரல்களால் நெஞ்சைத் தேய்த்து விட்டுக் கொண்டார். ஆனால் அந்த வலி கொஞ்சம் கொஞ்சமாய் அதிகமாகிக் கொண்டே போக, வியர்வை கொட்ட ஆரம்பித்தது.
தொண்டை வறண்டு, கண்கள் இருண்டு, கால்கள் தள்ளாட, அது டாய்லெட் என்று கூட பாராமல் அப்படியே தரையில் அமர்ந்தார் மேனேஜர்.
கண்ணில் தெரியும் காட்சிகள் எல்லாமே மங்கலாகிக் கொண்டே போக,
மெல்ல....
மெல்ல....
மெல்ல....
மெல்ல மயக்கத்திற்கு போனார்.
டாய்லெட்டிற்கு வெளியே பியூன் முருகனின் குரல், "யாருன்னே தெரியல... ரொம்ப நேரமாச்சு உள்ளார போயி... வெளிய வரவேக் காணோம்."
"ஆமாம் முருகா நானும் அரை மணி நேரத்துக்கு முன்னாடி ஒருதரம் வந்து பார்த்தேன் அப்பவும் இப்படித்தான் உள்ளே லாக் பண்ணி இருந்தது."
"யாரா இருக்கும்?" யோசித்த முருகன் "எல்லோரும் அவங்கவங்க சீட்ல இருக்காங்க... மேனேஜர் மட்டும்தான் அவர் சீட்ல இல்ல... ஒருவேளை அவர்தான் உள்ளே சிக்கிட்டாரோ?" என்றான் முருகன்.
"இல்லைப்பா அவர் ஹெட் ஆஃபீஸ் போயிட்டாரு போலிருக்கு."
நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஒரு கார்ப்பென்டரை வரவழைத்து, லாக்கை உடைத்துப் பார்க்க,
உள்ளே.... தரையில் கிடந்தார் மேனேஜர்.
"சார்... சார்" பாய்ந்து போய் உசுப்பினான் முருகன்.
கண்கள் மேலே செருக மரணித்திருந்தார் மேனேஜர் நரசிம்மன்.
அதேநேரம்,
உடம்பு குணமாகி மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு. வீட்டிற்குச். சென்றான் குப்பன்.
முற்றும்.
-"கணக்குத் தீர்ந்தது"
(ஒரு பக்கக் கதை)

-முகில் தினகரன்,
கோயம்புத்தூர்.