tamilnadu epaper

கரிகாலன் கல்லணை ஓர் பார்வை *

கரிகாலன் கல்லணை ஓர் பார்வை *

எமது கள ஆய்வு பயண செய்தி குறிப்பு. கரிகாலன் கல்லணை ஓர் பார்வை ************** காவிரி ஆற்றின் குறுக்கே திருச்சியில் இருந்து 20 கி. மீ. தொலைவில் கிபி 2 ம் நூற்றாண்டில் சோழ வம்ச மன்னன் கரிகாலனால் கட்டப்பட்டது. காண் போர் வியக்கும் பிரம்மாண்ட அணையாகும். கல்லணை அணை உலகின் நான்காவது பழமையான அணையும் இந்தியாவில் முதல் அணையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் நீளம் 1080 அடி,அகலம் 66 அடி, உயரம் 18 அடி கொண்டு நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. அந்தக் காலத்திலேயே தமிழகத்தின் நீர் மேலாண்மை அறிவை விரிவுபடுத்தி புதிய அணை புதிய ஆற்றை உருவாக்கியதும் கரிகாலனே. கரூர், முசிறியில் கற்களை வெட்டி எடுத்து யானைகளின் மூலம்ஆற்றுப் பாதை வழியே கொண்டு வந்தனர். பெரிய கற்களின் மீது களிமண் பசையை பூசி ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து இந்த அணை கட்டப்பட்டது. வரலாற்றில் வெண்ணி போர் நினைவாக கல்லணை கட்டப்பட்டது. தமிழக அரசு கரிகால் சோழனுக்கு சிறப்பாக மணிமண்டபம் கட்டி புகழ் சேர்த்துள்ளது. அந்தப் பக்கம் சுற்றுலா செல்பவர்கள் வாழ்க்கையில்ஒரு முறையேனும் கல்லணையை பார்வையிட்டு வரலாம். By ரெ. சுப்பா ராஜூ, தமிழக அரசு விருது பெற்ற ஆசிரியர். கோவில்பட்டி.