திருவாரூர் - மருதா நல்லூர் சாலையில் இருந்தது பழனியப்பன் மளிகைக்கடை கூட்டம் அலை மோதும் .
கடன் கிடையாது பொருட்கள் விலை அதிகம் தான், ஆனாலும் பொருட்கள் தரமானதாக இருக்கும் .
பழனியப்பன் முகத்தில் சிரிப்பு புன்னகை வராது . சம்பளம் பாக்கி தன் ஊழியர்களுக்கு வைக்க மாட்டார் சிடுசிடு முகம் காரியத்தில் கெட்டி வியாபாரத்தில் பலே கில்லாடி பழனியப்பன் .
குழந்தை இல்லை பழனியப்பனுக்கு தம்பி மகன்களை படிக்க வைத்து ஆளாக்கி விட்டார் .
ஊரில் பேச்சு யாருக்காக இந்த சொத்து கொஞ்சம் கனிவாக பேசி விலை குறைவா வியாபாரம் செய்தா என்ன பிள்ளை குட்டி இல்லாதவனுக்கு ஆசை பேராசையால்ல இருக்குன்னு பழனியப்பன் காது பட பேச்சு ..."
திடீர் என்று ஒரு நாள் ஆட்டோ விளம்பரம் , பத்திரிக்கை அனைவரும் வருக ஆதரவு தருக என்ற வாசகம் .
ஊர் மக்கள் ஒன்றாய் போய் நிற்க அன்று ஆதரவற்ற குழந்தைகள் , முதியோருக்கு கனவு இல்லம் பழனியப்பன் கைவண்ணத்தில் திறக்கப்பட்டது .
மலைத்து போய் நின்ற ஊர் மக்கள் ஒரே குரலாக கல்லுக்குள் ஈரம் என்று மனதார பாராட்டி விட்டு சென்றார்கள்...."
- சீர்காழி. ஆர். சீதாராமன்.