நடராஜன் கரகாட்டக்காரன் ராஜனின் மகன் சிறு வயதில் பள்ளிப் பருவம் வரை கரகாட்டம் நன்கு ஆடுவான். பல திருவிழா சபைகளில் பரிசும் வாங்கிக் குவித்தான் . இருந்தும் அவன் மனம் வேறு பாதையை தேடியது .
பள்ளியில் நன்கு படித்து கல்லூரி முடித்தான்.
பிறகு நல்ல வேலையில் அமர்ந்தான் நடராஜன் . நல்ல வருமானம் குழந்தைகள் குடும்பம் என அழகாக வாழ்க்கை காலங்கள் உருண்டு ஓடியது . மனதில் எந்த சலிப்பும் சஞ்சலமும் ஏற்படவில்லை நடராஜனுக்கு .
தன் மகள் மகனுக்கு திருமணம் முடித்தான் நடராஜன் . ஓய்வு நாளும் வந்தது . வேலையில் இருந்து ஓய்வு பெற்றான் நடராஜன் .
மகனும் மகளும் திருமணத்திற்கு பிறகு வேறு ஊர் சென்று நிரந்தரமாய் தங்கி விட நடராஜன் தம்பதியர் தனிமையில் மூழ்கினர் .
சில நாட்களுக்கு பிறகு நன்கு யோசித்து முடிவு எடுத்து நடராஜன் தம்பதியர் தன் சொந்த கிராமத்திற்கு சென்று குடியேறினர் .
நடராஜன் தன் தந்தை தொழிலான கரகாட்டத்தில் நன்கு பயிற்சி எடுத்து மீண்டும் தலையில் கரகம் வைத்து சபைகளில் திருவிழாக்களில் ஆடத் தொடங்கினார் .
பரிசும் , பதக்கமும் பெயரும் புகழும் குவியத் தொடங்கியது. தனிமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது .
இப்போது நடராஜன் தலையில் கரகம் எடுத்து வைத்தது நிம்மதி காசு என்று எதற்காகவும் இல்லை .
உயிரோட்டம் கொண்ட கலை அழிந்து விடக் கூடாது அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற உயிர் துடிப்பு தான் காரணமாக இருந்தது .
உணர்வுள்ள மனிதர்கள் உள்ள வரை எந்த கலையும் அழியாது என்பது மட்டும் உண்மை ..."
- சீர்காழி. ஆர். சீதாராமன் .
- 9842371679 .