ஆலமரத்தின் விழுதுகளாய் நின்ற குடும்ப உறவுகள் இன்று
வெட்டப்பட்ட காடுகளின் பாலைவன அடையாளங்களாய்
பெரிசுகள் என்ற அடைமொழியில் மூத்தவர்கள் முதியோர் இல்ல வெறுமைகளாய்
சகோதர சண்டையில் குடும்பங்கள் குதறப்பட்டு கிழிசல்களாய்
தனிக்குடித்தனம் என்ற பெயரில் உறவுகள்
அநாதை பிணங்களாய்
தொலைந்து போனது உறவுகள் மட்டுமல்ல ஒரு சமூகத்தின் அடையாளங்கள் அநாதையாய்
-ரா.பிரேம் சுரேஷ்
கோத்தகிரி