tamilnadu epaper

குபேரர் வாகனமும் கொட்டும் !!

குபேரர் வாகனமும் கொட்டும் !!

புத்தர் கோவிலின் சிலையருகில்
பணம்கொ ழிக்கும் குபேரர் !!
பத்தும் செய்யும் தங்கநாணயம்
பாதம் வந்து வீழ்ந்திட

வாகனம் மூஞ்சுறு குபேரர்கையில் !!
வாயது திறந்து நிற்குமழகு
வாகாகக் காலடிக் கலசத்தில்
வந்து வீழ்ந்து நிறைத்திடும் !!

பேங்காக் நகர மாயினும்
பாரதத்தின் கலாச்சாரப் பெருமையே !!
தங்க வியனுலகம் தந்திடுமே
தரணியில் புகழைப் பரப்பிடுமே !!


சண்முக சுப்பிரமணியன்
பேங்காக், தாய்லாந்த்