tamilnadu epaper

குவா குவா*

குவா குவா*

குவா குவா' சத்தத்தில் கண்விழித்தவள் தன் குழந்தையை பார்ப்பதற்கு முன், தனக்கு சுகப்பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் லயாவுக்கு நன்றி சொன்னாள்.

 

       அந்த ஊரிலேயே கைராசி மருத்துவர் எனப் பெயரெடுத்தவர் லயா.

 

         ஒன்று இரண்டல்ல... பல நூறு பிரசவங்கள் பார்த்தவர் லயா. 

 

           அவர் பார்த்ததில் 95 சதவீத பிரசவங்கள் சுகப் பிரசவங்களே. ஹை ரிஸ்க் தாய்மார்களுக்குக்கூட அவ்வளவு எளிதில் சிசேரியன் செய்யமாட்டார். இயன்றவரை சுகப்பிரசவத்திற்கு முயன்று பார்ப்பார்.

 

               லயாவால் அந்த பிரசவ ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிப் பெண்களின் வருகை அதிகரிக்க ஆரம்பித்தது.

 

                லயாவின் சாதனையும் இந்திய அளவில் பேசப்பட்டது.

 

                   மீடியாக்கள் அவரைக் கொண்டாட ஆரம்பித்தன.

 

                     அடுத்த கட்டமாக லயாவின் சாதனையை உலகறியச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டாள்- 

 

          'மகப்பேறு மருத்துவர் லயா' எனும் பெண் ரோபோவை உருவாக்கிய-திருமணமாகி பத்து ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு அடைய முடியாத-பெண் விஞ்ஞானி ஷர்மி!

 

 

*-ரிஷிவந்தியா,*

  *தஞ்சாவூர்.*