tamilnadu epaper

கோடைக்கேற்ற கொடை. காலையில் அருந்துங்கள். களிப்புடன் செயல்படுங்கள்.

கோடைக்கேற்ற கொடை. காலையில் அருந்துங்கள். களிப்புடன் செயல்படுங்கள்.


ஒரு நெல்லிக்காய், (பொடியாக நறுக்கியது) கொஞ்சம் புதினா, கறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லி இலைகள், ஒரு சிட்டிகை ஓமம், சீரகம், உப்பு, நான்கு மிளகு, பிடிக்கும் என்றால் ஒரு துணுக்கு இஞ்சி சேர்த்து 250மிலி தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் பருகி வாருங்கள். காபி, டீயை கொஞ்சம் மறந்து விடுங்கள். 


தேவைப்பட்டால் லைட்டாக சுட வைக்கலாம். அப்படியே சாப்பிடுவது அமிர்தமாகும்.

வடிகட்டிய விழுதை ரசத்தில் சேர்த்துவிடுங்கள். அற்புத பானமிது. ஆரோக்கியம் தருவது. முயற்சித்து பாருங்கள்.  


-வி.பிரபாவதி

மடிப்பாக்கம்