tamilnadu epaper

கோணல் பிம்பங்கள்

கோணல் பிம்பங்கள்


ஜெ.பாஸ்கரன் விலை: ₹150

தொடர்புக்கு : 98410 57047

தலைப்பு உட்பட 23 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.


கோணல் பிம்பங்கள் :


 கல்லூரி காலத்தில் தன்னோடு படித்து விரும்பித் திருமணம் செய்த கணவன் ராமனை மனைவி ஜானகி, லதா என்னும் பெண்ணுடன் தொடர்புப் படுத்தி சந்தேகிக்கிறாள். கணவரின் நண்பனிடமும் இதுபற்றி சொல்கிறாள். அடுத்த நாள் மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக செய்தி வர , ஹாலில் கிடத்தப்பட்ட அவள் முகத்தையே பார்க்க, அவன் அருகில் நிற்கும் பெண் தான் லதாவாக இருக்கும் என முடிகிறது கதை‌


பாசம்:  


தங்கை கணவன் சரியில்லை என்பதால், அவள் மகனையும் தன் மகன் போல் படாத பாடுபட்டு வளர்க்கும், பெரியம்மாவின் பாசத்தை மறந்து பணக்கார தந்தையுடன் போகிறான் அவன்.


விக்கல் : 


என்ன செய்தாலும் விக்கல் நிற்காத அவனிடம், நண்பன் வெங்கட் கணக்கில் 40ஐ தாண்டாத அவன் நூற்றுக்கு நூறு, வகுப்பில் ஃபர்ஸ்ட் என்றதும், விக்கல் நிற்கிறது. அடுத்த நாள் வகுப்பில் ஹிக்...ஹிக் என சத்தம் கேட்டு , செல்லம்மா டீச்சர் முறைக்க அவன் வெங்கியை கை காட்டுகிறான். பொய் சொன்னாலும் விக்கல் வருமோ?



-ஸ்ரீகாந்த்

திருச்சி