தேவா ஒரு நிமிடம் சிந்தித்தான். எல்லா பெண்களும் இப்படித்தானா? அல்லது நான் சந்தித்த பெண்கள் மட்டும் இப்படியா !என்று யோசித்து தனக்குத்தானே கேள்விகள் கேட்டுக் கொண்டான். தேவராஜ் என்கிற தேவா 27 வயது இளைஞன். ஒவ்வொரு காரியங்களையும் பிளான் பண்ணி செய்பவன் அது அவன் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டது .
அவன் அரசு அலுவலகத்தில் ஒரு காசாளர். காலை அலுவலகம் வந்தவுடன் பார்த்தால் அலுவலகத்தில்வேலை செய்பவர்கள் அனைவரும் வேலையைத் தாண்டி ,கதை தான் ஓடிக் கொண்டிருக்கும். இதைப் பார்த்தவுடன் எரிச்சல்தான் வரும்: இவர்கள் எப்பொழுது வேலை செய்வார்கள்? கேட்கவும் பயம். பெண்கள் அதிகமாக உள்ளதால், மீட்டுவில் இழுத்து விடுவார்களோ? என்று ஒரு பயம். ஒவ்வொன்றுக்கும் மணி அடித்து கேட்டால் தான் ஆடி அசைந்து எடுத்து வருவார்கள். அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் சென்றால் பக்கத்து வீடு எதிர்வீட்டு பெண்களின் மாநாடு நடக்கும். அடுத்த வீட்டு கதை ஓடும். அப்பா வளர்த்ததால் தேவாவிற்கு பெண்கள் பற்றிய சிந்தனைகள் இவர்களைப் பார்த்தே வளர்ந்தது. கல்யாணம் என்றாலே ஒரு பயம் வரத் தொடங்கியது. வரும் மனைவி "இப்படி அமைந்து விட்டால் "என்ற பய உணர்வு. அப்பாவிடம் கேட்கவும் பயம். ஒரு நாள் கேட்டே விட்டான். அப்பாஅம்மா எப்படிப்பா? அவர் தேவா எங்கும் எல்லா இடங்களிலும் ஆண்களோ, பெண்களோ அவர்களாய் திட்டமிட்டால் தான் வேலை செய்ய முடியும். எல்லோருக்கும் இரண்டு பக்கம் உண்டு. அம்மாவிடம் உள்ள பாசிட்டிவ் மட்டுமே தான், நான் பார்த்தேன். அதனால் அவள் என்னை விட்டுச் சென்றதும், காலமானதும் மறுவிவாகம் செய்யத் தோன்றவில்லை. நீ பெர்பெக்ட் என்று உன்னை நினைத்துக் கொண்டு உள்ளாய். உன்னைப்பற்றி மற்றொருவரிடம் கேட்டால் தான் உன்னுடைய மறுபக்கம் தெரியும். மனிதர்களிடம் இரண்டும்உண்டு எது மிகையோ அது பாசிட்டிவாக இருந்தால், பத்துக்கு ஏழு மார்க் பார்த்துப் போட்டு நம்மை சரி செய்து கொள்ளுதல் வேண்டும். அவர்களைச் சரி செய்தல் கடினம் எதிர் வீட்டின் வெளியில் உட்கார்ந்து அரட்டை அடிக்கிறார்கள் என்றால், அது உன் வீட்டிற்கு பாதுகாப்பு என்று எடுத்துக்கொள் திருடன் வர வழியில்லை அதனால் அவர்கள் நமக்கு பாதுகாப்பு அதிகாரிகள் என்று நினைத்துக் கொள். அப்போது அவர்களைப் போற்றத் தோன்றும் .
அலுவலகத்தில் கதை அடித்தால் அவர்கள் மலரும் முகத்தை பார் உன் டென்ஷன் குறைய வாய்ப்பு உண்டு .அங்கு அவர்கள் உனக்கு ஒரு மருத்துவராகத் தென்படுவார். தேவாவிற்கு புரிய ஆரம்பித்தது. எதிர்மறையிலும் நேரமறையை
அறிய தொடங்கினான். முதலாவதாக திருமணத்திற்கு ஓகே சொன்னான். எதிர் வீட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளை அங்கீகரிக்க தொடங்க ,மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்ன அப்பாவை மகிழ்வுடன் கட்டிப்பிடித்தான்.
-மல்லிகா கோபால்
புதுச்சேரி