சீர்காழி , மே , 26 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் 69 –ஆம் ஆண்டு முத்து சட்டைநாதர் உற்சவம் நடைபெற்றது. தருமை ஆதீனம் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பிராமணர்
சங்க மயிலாடுதுறை மாவட்ட தலைவர்
கடவாசல் ரமணன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தருமை ஆதீனம் திருக்கரங்களால் அன்னதானம் நிகழ்வு நடைபெற்றது. ஏற்பாடுகளை பிராமணர்கள் உற்சவக் கமிட்டி பக்தர்கள், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.