தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வாடிவாசல் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு வாங்கி ஊர் முழுக்க டிவி முழுக்க பிரபலமானான் அரவிந்த்
....."
" நான்காவது ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் சற்று நிதானம் இழந்த நிலையில் அரவிந்த் வயிற்றை பதம் பார்த்து குடலை வெளியில் வாரிப் போட்டு சென்றது அந்த மச்சக்காளை ....."
" கொம்புகள் குத்திய ஆழம் காயம் பெரிதாக இருந்தது ஆனாலும் டாக்டர்கள் அரவிந்த் உயிருக்கு சேதம் இல்லாமல் காப்பாற்றி விட்டனர். நல்லபடியாக வீடு திரும்பினான் அரவிந்த் ....."
" ஆனாலும் இல்லற சுகத்தில் ஈடுபடக் கூடாது என்று டாக்டர்கள் அழுத்தமாக கூறி விட்டனர் ...."
" ஒரே மகனான அரவிந்த்தின் நிலை கண்டு ஏங்கி வருந்திய அவன் தாயும் தந்தையும் உடல் நலக்குறைவால் காலம் ஆகி விட்டனர் . இப்போதும் கூட வீரம் அரவிந்த் உடலில் ரத்தமாகத் தான் ஓடிக் கொண்டு இருக்கிறது ... "
" முகத்தில் மட்டும் வாழ்க்கையை இழந்து விட்டோம் என்கிற ஏக்கக் கவலை ரேகையும் , மனதில் இலேசான கலக்கமும் இருந்தது வந்தது அரவிந்திற்கு ....."
" பல வருடங்கள் கழித்து ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்கும் வாய்ப்பு அரவிந்த்திற்கு கிடைத்தது ......"
" போட்டியை துவங்கி வைப்பதற்கு முன்பு ஜல்லிக்கட்டில் பலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் மறுவாழ்வும் எந்த அரசாங்கமாக இருந்தாலும் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கையை வைத்து விட்டு போட்டியை துவங்கி வைத்தான் அரவிந்த் . ..."
" பலத்த கைதட்டல் விசில் சத்தம் பறந்தது அரவிந்த் போல ஜல்லிக்கட்டில் வாழ்வை இழந்து பாதிக்கப்பட்ட கூட்டம் கொடுத்த எச்சரிக்கை மணியோசையாகவும் அது இருந்தது .... "
- சீர்காழி. ஆர். சீதாராமன் .