tamilnadu epaper

சாதியம் ஒழியும்; தானகவே

சாதியம் ஒழியும்; தானகவே

சாதி இருக்கட்டும்;
சாது பிள்ளையென;

நம் பிறப்பின்
முதல் அடையாளமென.

இசக்கி முத்து 
இன்று  ஆட்சியாளர்.

மகாதேவன் பாதணி 
விற்பனை முனைவர்.

விவசாயம் பார்க்கிறார்கள்;
ஜமிலாவும்  வின்சென்ட்டும்.

சோணைமுத்து உயர் நீதிமன்ற நீதியரசர்.

மங்களம் செல்கிறாள்,
வேளாங்கண்ணி வருடம் தோறும்.

அன்சாரி ராவுத்தர் 
மந்திரிக்கிறார்; மசூதியில்.

கிருஷ்ணன் பெயரனுக்கு
வயிற்று நோவுக்காக.

ஐயப்பன் கோவிலில்
நாளும் " அரிவராசனம்"

யேசுதாஸ் இசையில் இழைந்து  நிற்கிறோம்.

இன்றைய குடியரசுத் தலைவர்  பழங்குடியினர்.

சாதியம் இன்று சமூகத்தில் இல்லை

அரசியல்வாதிகளின் கையில்  பகடைக்காயாக மட்டுமே.

ஊத ஊத பெரிதாகும் பலூன் போல்.

பேசாது விடுங்கள்;
தானே சாகாடும்

சாதியம்; சத்தியமாய் 
சங்கெடுத்து இயம்புறேன்.

சாதியம் தானே சாகும்

சசிகலா விஸ்வநாதன்