அடுத்தவன் வீட்டு ஆடு ...
தன் தோட்டத்திற்குள் ....
புகுந்த பொழுது ....
ஆத்திரப்பட்டு....
அடித்து விரட்டியவன் ....
கோயில் மாடு ....
புகுந்த பொழுது...
விரட்டி விட பயந்தான்....
கோயில் மாட்டை....
விரட்டினால் ....
சாமி குத்தமாகிவிடுமாம்.
இரக்கம் ....(கவிதை)
தினம் தினம் ...
கடை வீதியில் ....
கூட்டிப் பெருக்குபவள்..,.
தீபாவளி இனாம்...
கேட்ட பொழுது ....
இல்லை என்றவன்......
காக்கிச்சட்டை வந்து கேட்டதும் ......
எதுவும் பேசாமல்....
கல்லாப்பெட்டியை திறந்தான்....
நடிகை.....( கவிதை)
அழுதாள்....
கதறி அழுதாள்.....
மீண்டும் அழுதாள் .....
பலமுறை அழுதாள்
இயல்பாய் இல்லை என்று ...
இயக்குனர் பளார் என்று
கன்னத்தில்....
அறைந்து விட்டார் ....
அவமானத்தில்......
கதறி அழுத பொழுது ....
இயல்பாய் இருப்பதாய் .....
எல்லோரும்......
பாராட்டினார்கள்.....!
கவிஞர்
ரெட்டியபட்டி எஸ் மணிவண்ணன்