சொர்ணபூமியாம் தாய்லாந்த் இதுவும்
சொர்க்கம்போல் அமைந்த திருநாடு !!
வானாளவ உயர்ந்த கட்டிடங்கள்
வண்ணமிகு மின்னலங் காரங்கள் !
தூசிகுப்பை இல்லா அகலசாலைகள்
தூசிகிளப்பாது செல்லும் வாகனங்கள் !!
துயரமறியா வாழவைக்கும் புத்தர்கள்
துயரம்வருவது ஆசையால் தானே !!
புத்தரில்லா சாலைகளே இல்லை
போதனை கூறஆட்கள் தேவையுமில்லை !!
வத்தாத செல்வம்கொழிக்கும் திருநாடு
வருவோரெல்லாம் தந்திடும் சுற்றுலாநாடு !!
சண்முக சுப்பிரமணியன்
பேங்காக், தாய்லாந்த்.