பொழுது போக்குப்
பொலிவாய் விளங்கும்
அழகாய் வரலாற்றை
அன்பா யறியலாம்!
மகிழ்வும் மாண்பும்
மணியாய்க் கிட்டும்
தகவுக் காட்சிகள்
தானாய்க் கிட்டும்!
அருவி யாறு
குளங்க ளெல்லாம்
விரும்பிக் காண
விழைவு ஏற்படும்!
முன்னோர் கட்டிய
மேன்மை அணைகள்
பின்னோர் பார்த்து
மகிழ வுதவும்!
கொள்ளை யின்பம்
குலவுக் கவிதையாய்
உள்ளம் மகிழும்
உன்னதச் சுற்றுலாவே!
*முனைவர்*
-இராம.வேதநாயகம்