tamilnadu epaper

சென்னை அணி 11 போட்டியில் 2 வெற்றி, 9 தோல்வி என கடைசி இடத்தில் நீடித்து வருகிறது.

சென்னை அணி 11 போட்டியில் 2 வெற்றி, 9 தோல்வி என கடைசி இடத்தில் நீடித்து வருகிறது.

பெங்களூரு:


நடப்பு ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடந்தது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.


அதன்படி, முதலில் பேட் செய்த ஆர்சிபி 20 ஓவரில் 213 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்.சி.பி. அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.


இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது.


2வது இடத்தில் மும்பை இந்தியன்சும், 3வது இடத்தை குஜராத்தும், 4வது இடத்தை பஞ்சாப்பும், 5வது இடத்தை டெல்லியும், பிடித்துள்ளது.


சென்னை அணி 11 போட்டியில் 2 வெற்றி, 9 தோல்வி என கடைசி இடத்தில் நீடித்து வருகிறது.

/////


ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் பள்ளத்தில் விழுந்து 3 வீரர்கள் உயிரிழப்பு


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் ராணுவ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்ததில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.


காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பேடட்ரி சஸ்மா என்ற இடத்தில் இன்று (மே.4) காலை 11.30 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.


விபத்து குறித்து போலீஸ் தரப்பில், “ராணுவ வீரர்கள் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வாகனம் மட்டும் கட்டுப்பாட்டை இழந்து 700 அடி பள்ளத்தில் விழுந்தது. அதில், அந்த வாகனத்தின் பயணம் செய்த அமித் குமார், சுஜீத் குமார் மற்றும் மான் பகதூர் ஆகிய 3 வீரர்கள் உயிரிழந்தனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விபத்து நடந்த இடத்தில் ராணுவத்தினர், போலீஸார், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், உள்ளூர் மக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ராணுவ வாகனம் முழுவதுமாக நொறுங்கிவிட்டது.