tamilnadu epaper

செருப்பு

செருப்பு


தெருவில்  நடந்து  சென்று கொண்டிருக்கையில்  எந்த வீட்டிலோ  யாரோ ஒரு அப்பா  தன் மகனையோ அல்லது மகளையோ இல்லை 

மனைவியையோ  'செருப்பால  அடிப்பேன் ' என கத்திக் கொண்டிருந்தார்.

அப்போதுதான் சட்டென்று என்  நினைவுக்கு வந்தது 'என்னங்க, இந்த 

செருப்பை தச்சு வையுங்க' என இரண்டு நாள் முன்பு ஊருக்குச் 

சென்ற என் மனைவி சொல்லிச்

சென்றது.நல்ல வேளை!நாளை அவள் 

திரும்பி வருவதற்குள் தைத்து வைத்து விடவேண்டும்.இல்லாவிடில்அந்த பிஞ்சசெருப்பு மேலும்பிய்ய வாய்ப்பிருக்கு.

நினைவூட்டியஅந்த 'அப்பா' வுக்கு

மிக்க நன்றி.


-டீ. என். பாலகிருஷ்ணன் 

5/501 சத்சங்கம் தெரு 

மடிப்பாக்கம் சென்னை 600091