" என்ன வாழ்க்கை பொய்யான உலகம் விளம்பரத்திற்கு தான் காலம் தாய்மொழி - தமிழ்மொழி பற்று எல்லாம் வெளிவேஷம் என்று புலம்பிக் கொண்டு வாசலில் நாற்காலியில் அமர்ந்து இருந்தார் வயதான மகாதேவன் .
" தமிழ் மொழியில் அத்தனை ஈடுபாடு கவிதை , இலக்கிய புத்தகங்கள் வெளியிட்டவர் , இருநூறுக்கும் மேற்பட்ட விருது , இலக்கிய பேரவை, கவிமன்றம் என்று தமிழை உயிராக நினைத்து தன் சொற்ப வருமானத்தில் தமிழ் மொழிக்கு நிறைவான தொண்டு செய்தவர் மகாதேவன் .
குடும்பம் பெரிதாய் வளர பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த மகாதேவன் தமிழ் மீது இருந்த பற்றால் ஈடுபாட்டால் குடும்பத்தை விட்டு விலகி தனித்து வாழ்ந்தார் .
தமிழ் தனக்கு எதுவும் செய்யவில்லையே என்ற ஏக்கம் தவிப்பு மனதில் குமுறிக் கொண்டு இருந்தது . வெளிக்காட்டாமல் தவித்தார் மகாதேவன் .
அந்த தெருவில் புதிதாக குடிவந்த ஆங்கில ஆசிரியர் குமரன் , பெரியவரின் மகாதேவனின் சுயநலமில்லா தமிழ்ப்பற்று ஈடுபாடு உழைப்பு சேவை பற்றி தெரிந்து கொண்டார். அவரின் பொருளாதார இயலாமையையும் புரிந்து கொண்டார்.
" பெரியவர் மகாதேவனுக்கு தெரியாமல் அவர் ஆற்றிய பணியை எழுத்து மூலம் விண்ணப்பமாக அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தார் .
காலம் கனிந்தது குமரன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு உடன் செயல் வடிவம் பெற்றது .
அரசாங்க அதிகாரிகள் மகாதேவனை அழைத்து கெளரவித்து உதவித் தொகையும் கொடுத்து மாதா மாதம் வங்கிக் கணக்கில் உதவித்தொகை வாழ்நாள் முழுவதும் ( இறக்கும் வரை) செலுத்தப்படும் என்று உறுதி அளித்தனர் .
ஆங்கிலம் படித்த குமரனின் தமிழ் ஈடுபாட்டை நினைத்து ஆனந்த கண்ணீர் சிந்தினார் மகாதேவன் .
விலக்கி வைத்த குடும்பம் பதறியபடி அணைத்துக் கொண்டது வயதான மகாதேவனை .
இப்போது குமரன் அவருக்கு தமிழ் கடவுள் குமராகவே தெரிந்தார் . புது வாழ்வு கிடைத்த பெருமிதத்தோடு இந்த தள்ளாத வயதிலும் தமிழுக்கு தொண்டு செய்ய புறப்பட்டார் இளைஞன் போன்று அதிவேகமாக மகாதேவன் ...."
- சீர்காழி. ஆர். சீதாராமன் .