தமிழே செந்தமிழே
நவில்தோறும் நற்றமிழே
தமிழனின் நாவில்
நாள்தோறும் நர்த்தனமாடுகிறாய்
இனிமை தந்து இதயத்தை நிறைக்கிறாய்
கவிஞன் மனதில் கற்பனை
ஊற்றெடுக்கிறாய்
வான்மழையாய் பொழிந்து தமிழால்
நனைக்கிறாய்
சுவையூட்டி எண்ணத்தில் வண்ணமாக
மிளிர்கிறாய்
ஒற்றுமை உணர்வுதனை உள்ளத்தில் வளர்த்தாயே
உயர்ந்த இமயமாய் பட்டொளி வீசுகிறாய்
தெள்ளமுதால் உலகமொழிகளில் தனித்துவ
உயர்வானாய்
நானிலமெங்கும் உன்னாட்சியில்
சீர்படும் தமிழினமே
அமுதருந்தும் மழலையின்
நாவில் சங்கமமானாய்
அமுதூட்டும் அன்னையின்
அன்பின் மொழியானாய்
காவியமாய் கவிதையாய்
காப்பியமாய் உருவானாய்
எம்மொழியானாலும் செந்தமிழ் போலவே இனித்திடுமா
தமிழே உனக்கொரு பாமாலை புனைந்திட்டேன்..
வாழ்க செந்தமிழ் வளர்க நற்றமிழே...
பெ.வெங்கட லட்சுமி காந்தன்.
விருதுநகர்