tamilnadu epaper

தமிழ் புத்தாண்டு கவிதை

தமிழ் புத்தாண்டு கவிதை


விஷ்வாவசு வா... வா...


தமிழ் ஆண்டுகளின் 12 பிள்ளைகளின் மூத்த 

கிள்ளை சித்திரை மகவு, 

அந்நாள் பொன்னாளாக 

எந்நாளும் இல்லாத திருநாளாக வேம்பு மா வெல்ல பச்சடி செய்து வரவேற்பதில் உள்ள நெகிழ்ச்சி அடைகிறதே..

புது வருடத்தில் புது ஞானம் பிறக்க புத்தம் புதிய நாளும் இனிதாக மலர புது ஒரு உற்சாகம் வந்ததே ..

பிறக்கும் விசுவாவசு ஆண்டின் சிறக்கும் நிகழ்வுகளை காண அச்சாரம் இடும் சித்திரை முதல் நாள்

தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையை வருக... வருக... என முத்திரை பதிக்கும் திருநாளாக போற்றி நம் 

நித்திரையை மறந்து வரவேற்போம் .


தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 



-உஷா முத்துராமன்