அன்னை மொழி.. அமுதம் பிழி
ஆதிமொழி அந்தாதி வடி...
தவம் பல செய்தும் கிட்டாத...
உயர்வை எட்டாத வாழ்வை...
தமிழ் புத்தாண்டே தருக.. நலம். பல..அருள்க..
நித்திரைத் தொலைத்த.. கனவுகள் கைகூட...
சித்திரை ஒன்றே வருக...
சித்திரமாய் வாழ்வதனைத் தருக...
ஏக்கங்கள் ஆக்கங்களாய்..உருமாறட்டும்...
இயலாமை... எட்டிப் பிடிக்கும்... தூரத்தில் கைவசம்.. வரட்டும்...
வசந்தங்கள் வாழ்வில் ...வல்லினமாகட்டும்...
பரிதவிப்பு.. பற்றாக்குறை மெல்லினமாகட்டும்...
உபத்திரவங்களும்... கண்ணீரும்..இடையினமாகட்டும்
புன்னகையும் புளங்காகிதமும்.. வாழ்வில்... அணிவகுப்பு நடத்தட்டும்...
புதுமைகள் திரண்டு..நம்மைத் திணறடிக்க...
தமிழ் புத்தாண்டே வருக..
தரணி போற்றும் வாழ்வதனைத் தருக
-தே.சௌந்தரரஜன்
கல்யாணம் பூண்டி