தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஆயுள்காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கிச்சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட ஏழு முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் உள்ளனர்.