ஏன் அந்த தயாரிப்பாளர் ரொம்ப அதிர்ச்சியா உட்கார்ந்து இருக்கிறார்?
அவர் படத்துல பயன்படுத்துன திருக்குறளுக்கும் புறநானூருக்கும் ராயல்டி கேட்டு திருவள்ளுவர் கணியன் பூங்குன்றனார் பேர்ல் நோட்டீஸ் வந்து இருக்காம்
************************************************
அப்பா: உனக்காக படிப்புக்கு நான் ஒண்ணாம் வகுப்பில் இருந்து லட்சக்கணக்கில் செலவு பண்ணி இருக்கேன். பன்னிரண்டாம் வகுப்புல கம்மியா மார்க் எடுத்து இருக்கியே?
மகன்: நீங்க ஏன் 12 ஆம் வகுப்புல எடுத்த மார்க்கை மட்டும் பாக்குறீங்க. ஒன்றாம் வகுப்பில் இருந்து எடுத்த மார்க் எல்லாம் கூட்டிப் பாருங்க. நிறைய வரும்.
************************************************
************************************************
மங்கள வாத்தியம் கோஷ்டி ஏன் போட்டித்தேர்வு அறைக்கு வெளியே நிக்கிறாங்க?
முகூர்த்த நேரம் முடிய போறதுனால போட்டித் தேர்வு எழுதிக்கிட்டு இருக்குற பொண்ணுக்கு அங்கேயே திருமணம் நடக்க போகுதாம்.
************************************************
************************************************
ஏன் அந்த டாக்டர் மொபைல் பார்த்து பார்த்து மருந்து எழுதுறாரு?
அவர் லீக்கான கொஸ்டின் பேப்பர் நீட் தேர்வுல பாஸ் ஆனவராம்.
-நாகை பாலா