ஸ்கூல் சரிப்பட்டு வராது... 'கவர்மெண்ட்
ஸ்கூல்'ல பையன சேக்கலான்னு... கேட்டியா...' நான் படிக்க வக்கிறன்னு" />
"நான் அப்பவே தலபாடா அடிச்சிகிட்டேன். நம்ம தகுதிக்கெல்லாம் கான்வெண்ட்
ஸ்கூல் சரிப்பட்டு வராது... 'கவர்மெண்ட்
ஸ்கூல்'ல பையன சேக்கலான்னு... கேட்டியா...' நான் படிக்க வக்கிறன்னு உன் தம்பி சொன்னத நம்பி ஒத்துகிட்ட
இப்ப கஷ்ட படுறது நாமதானே..." முருகன் தன் மனைவி கனகாவிடம் வேகப்பட்டான்
"அக்கா கஷ்ட படுறாளே பையன நாம
படிக்க வைக்கலான்னு ஆசப்பட்டு
ஐந்தாம் கிளாஸ் வரைக்கும் படிக்க வச்சான்
ஏதோ நம்ம அதிஷ்டம் அவனுக்கு வாச்சவ
சரியில்ல... பொண்டாட்டி பேச்ச கேட்டு நம்மள கை விட்டான்... இதுக்கு மேல நாமதான் எப்படியாவது கஷ்டப்பட்டு பையன படிக்க வைக்கணும்... நீங்க ஒண்ணும் கஷ்ட படவேண்டாம், எனக்கு கழுத்துல மஞ்ச கயிறு மட்டும் இருந்தா போதும்...கழுத்துல கெடக்குறத கழட்டி தரேன் ... முக்கா பவுன் தேறும் வித்துட்டு இந்த வருஷ 'பீஸ்' படிப்பு
செலவ பாத்துப்போம் அடுத்த வருஷம்
ஆண்டவன் வழி காட்டுவான்..."கனகா கணவனிடம் சொல்ல,
" ஆமாண்டி... இவனுக்கு துப்பில்ல
பொண்டாட்டி தாலியை வித்துட்டு பையன
படிக்க வக்கிறான்னு பாக்குறவன் பரிகாசம்
பண்ணவா..."
" நாலு பேருக்காக நாம வாழலீங்க ..."
"சரி அவசப்பட்டு தாலியை கழட்டிடாத...
எங்கயாவது வட்டிக்கு பணம் கேட்டு பாப்போம்..." முருகன் மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.
அம்மா அப்பாவின் கவலைகளை
கேட்டுக்கொண்டிருந்த மகன் " நீங்க
கஷ்டப்படுறது எனக்கு கஷ்டமா இருக்கு....
ஐயா அப்பதுல் கலாம் 'கவர்மெண்ட் ஸ்கூல்'
ல படிச்சவருதானே... ? இது நாள் வர என்ன
படிக்கவச்ச நம்ம மாமா 'கவர்மெண்ட் ஸ்கூல' படிச்சி வேலைக்கி போகலயா...?
நம்ம தெருவுல பாலு மாமாவும் மீனா அக்காவும் ' நீட்' எக்ஜாம் பாஸ் பண்ணி
டாக்டர் ஆகலையா...? கண்டிப்பா நானும்
'கவர்மெண்ட் ஸ்கூல்'ல படிச்சி வேலைக்கி போவேன்... என்ன ஆறாம் வகுப்புக்கு
'கவர்மெண்ட் ஸ்கூல்' ல சேருங்கப்பா..."
மகனின் பேச்சில் இருந்த நம்பிக்கையை
கண்டு வியந்து கனகா கண்ணீர் மல்க
மகனை கட்டி அணைத்துக்கொண்டாள்.
முருகனோ பிரமித்துபோய் நின்றான்.
-சுகபாலா,
திருச்சி.
"